இந்தியர்களைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட சேர்த்து வைப்பதில் அதிகம் கவனம் செலுத்தும் சமூகம் நம்முடையது. சேர்த்து வைப்பது புத்திசாலித்தனமான காரியம். ஆனாலும், பணம் சேமிக்க ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. அப்படியாக, பணத்தை சேமிக்க முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்களை (Systematic Investment Plans – SPI) பயன்படுத்துவது நன்று. நல்ல பலன் நல்கும் முதல் ஐந்து எஸ்பிஐ திட்டங்கள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியல் CRISIL என்னும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.



  1. BOI AXA Tax Advantage Fund


பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்த முதலீட்டுத் திட்டம். CRISIL வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி கடந்த ஆறு மாதத்தில் முதலீட்டிலிருந்து 14.58 சதவீத நிதி திரும்பக் கிடைத்திருக்கிறது. இதே சதவீதம் ஒரு வருடத்தில் 42.6 சதவீத நிதியாக இருந்திருக்கிறது. மூன்று வருடத்திற்கு 28.07 சதவீத நிதியாக இருந்திருக்கிறது.



Caption


 



  1. IDFC Tax Advantage Fund


இந்த திட்டத்தில் பலதரப்பட்ட முதலீட்டு காலகட்டங்களுக்கு எவ்வளவு நிதி திரும்பக் கிடைத்திருக்கிறது என்பதை CRISIL அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆறு மாதத்திற்கு 12.68 சதீவீத நிதி திரும்பக் கிடைத்திருக்கிறது. ஒரு வருடத்தில், 48.98 சதவீத நிதியும் மூன்று வருடங்களுக்கு 21.46 சதவீத நிதி திரும்பக் கிடைத்திருக்கிறது.



  1. Mirae Asset Tax Saver


ஆறு மாதங்களுக்கு 11.5 சதவீத நிதியும் ஒரு வருடத்திற்கு 37.57 சதவீதமும் மூன்று வருடங்களுக்கு 23.25 சதவீதமாகவும் இந்த முதலீட்டுத் திட்டத்தின் மூலம் திரும்பக் கிடைக்கும் நிதி இருந்திருக்கிறது.



  1. Quant Tax Plan


ஆறு மாதங்களுக்கு 15.7 சதவீத நிதியும் ஒரு வருடத்திற்கு 68.38 சதவீதமும் மூன்று வருடங்களுக்கு 35.51 சதவீதமாகவும் இந்த முதலீட்டுத் திட்டத்தின் மூலம் திரும்பக் கிடைக்கும் நிதி இருந்திருக்கிறது.



  1. Union Long Term Equity Fund


ஆறு மாதங்களுக்கு 14.83 சதவீத நிதியும் ஒரு வருடத்திற்கு 38.06 சதவீதமும் மூன்று வருடங்களுக்கு 21.97 சதவீதமாகவும் இந்த முதலீட்டுத் திட்டத்தின் மூலம் திரும்பக் கிடைக்கும் நிதி இருந்திருக்கிறது.


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்