ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர் ஆயிரக்கணக்கில் சம்பளம் என்றாலும் வாங்கும் சம்பளம் எல்லாம் ஈ.எம்.ஐ கட்டணம் செலுத்துவதிலேயே போய்விடுகிறது எனப் புலம்புபவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த ஆர்டிகலை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும். 


வாங்கும் சம்பளம் 50,000 ரூபாய் என்றாலும் அதில் 35000 ரூபாய் ஈஎம்ஐ போன்றவற்றிற்கே செலவாகிவிடுகிறது. மீதம் 15,000தான் குடும்பச் செலவு. இதில் சேமிப்பு எல்லாம் எப்படிச் சாத்தியம்?. பெரும்பாலான மிடில் க்ளாஸ் நபர்களிடம் இந்தச் சந்தேகம் உள்ளது. அவர்களுக்காகவே சில எக்ஸ்க்ளூசிவ் அட்வைஸ்களைத் தருகிறார் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்.


உங்களுடைய நெட் வொர்த் பாசிட்டிவ்வா ? நெகட்டிவ்வா? 



வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முன்பு ஒரு தனிநபரின் நெட்வொர்த்தை கணக்கிடுவது அவசியமாகிறது. தனிநபரின் நெட்வொர்த்தில் என்னவெல்லாம் அடக்கம்?, ஊழியராக இருந்தால் அவருடைய வருமானம், பிசினஸ் செய்பவராக இருந்தால் அவருடைய பிசினஸின் மொத்த மதிப்பு, லாபம் உள்ளிட்டவை, உங்களது பெயரில் வாங்கப்பட்ட உயர்ந்த விலையுள்ள பொருட்கள், உதாரணத்துக்கு,: தஞ்சாவூர் ஓவியங்கள்..
போன்றவற்றின் மதிப்பு ஆகியவை தனிநபர் நெட்வொர்த்தில் அடக்கம். 


உங்களது நெட்வொர்த் பாசிட்டிவ்வாகவே இருக்க வேண்டும். நிறைய இந்தியர்களுக்கு அவர்களுடைய நெட்வொர்த் நெகட்டிவாகவே இருக்கிறது. அந்தச் சூழலிலேயே அவர்கள் கடன் வாங்குவதால்தான் சேமிக்க முடிவதில்லை என்கிறார் ஆனந்த். 


பாசிட்டிவ் நெட்வொர்த் ஒரு ரூபாய் அளவாவது அதிகரித்திருக்க வேண்டும் என்கிறார் அவர். 
அப்படி நெட்வொர்த் இருக்கும் நிலையில் ஐ.டி. ஊழியர்களுக்கு எளிதாகவே பெர்சனல் லோன்கள் கிடைக்கின்றன. இதர துறை ஊழியர்கள் நேரடியாக வங்கிகளை அணுகி பெர்சனல் லோன் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்.  


மேலும் சில மணிப்பேச்சு வீடியோக்களுக்கு...


 






 


நன்றி: மணிப்பேச்சு