திருமண காலம் தொடங்கியுள்ளது. யாருக்கேனும் ஏதாவது பரிசு வழங்க வேண்டும் என நினைத்தால், டிஜிட்டல் தங்கத்தை வழங்கலாம் என்ற வாய்ப்பு உண்டு. மேலும் தங்கம் என்பது நற்செய்தியாகவும், நல்ல முதலீடாகவும் கருதப்படுகிறது. 


டிஜிட்டல் தங்கம் என்பதால் அதனைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பெரிய பொறுப்புகள் இல்லை. மேலும் இது புத்திசாலித்தனமான முதலீடாகவும் அமையும். டிஜிட்டல் தங்கத்தைப் பேடிஎம் மூலமாக கட்டணம் செலுத்தி வாங்கலாம். இதற்கான அதிகபட்சம், குறைந்தபட்சம் என உங்கள் பட்ஜெட்டிற்கு எந்த எல்லையும் இல்லை. டிஜிட்டல் தங்கத்தை வாங்குபவர் அதனை வைத்துக்கொள்ளலாம்; பிறருக்கு விற்பனை செய்யலாம். நிஜ நாணயங்களாக மாற்றி, தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். 



பேடிஎம் கோல்ட் சிறப்பம்சம் பயனாளர்களுக்கு 999.9 தூய அளவிலான 24 காரட், பி.ஐ.எஸ் சான்றிதழ் வழங்கப்பட்ட டிஜிட்டல் தங்கத்தை ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலகட்டத்திற்குள் வாங்குவதற்கும், உங்கள் பட்ஜெட்டிற்குள் செயல்படுவதற்கும் வசதிகளை அளிக்கிறது. மேலும் பயனாளர்கள் தங்கள் தங்க சேமிப்புத் திட்டங்களை வார அளவில், மாத அளவில் தானாகவே பணம் பிடிக்கும் வசதியுடன் உருவாக்கிக் கொள்ளலாம். 1 ரூபாய் முதல் இதில் முதலீடு செய்யலாம். மேலும், இந்தத் தளத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் தங்கத்தை நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ மாற்றி, பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பும் வசதியையும் நமக்கு அளிக்கிறது. 


பேடிஎம் தளத்தில் டிஜிட்டல் தங்கம் வாங்குவது எப்படி?


1. பேடிஎம் தளத்திற்குச் சென்று, பேடிஎம் கோல்ட் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 



2. தினசரி தங்கத்தின் விலைப் பட்டியலைப் பரிசோதித்த பிறகு, நீங்கள் விரும்பிய தொகையையோ, தங்கத்தின் எடையையோ குறிப்பிடவும். 


3. பேடிஎம் வாலட், பேடிஎம் UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் முதலானவற்றைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கிய டிஜிட்டல் தங்கத்தை உடனே டிஜிட்டல் லாக்கரில் வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்