எஸ்பிஐ வங்கி வழங்கக்கூடிய பிட்னஸ் மற்றும் ஹெல்த் கார்டை சந்தா செலுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4999 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வருகிறது. இதோடு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக சலுகைகளும் வழங்கப்படும் நிலையில் தற்போது அசத்தல் அறிவிப்பு ஒன்றை டிவிட்டர் வாயிலாக எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி பிட்னஸ் மற்றும் ஹெல்த் ஆர்வலர்களுக்காக “எஸ்பிஐ பல்ஸ்“ என்ற கிரெடிட் கார்டை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அப்படி என்ன மற்ற கிரெடிட் கார்டுகளில் உள்ளது போல் இதில் என்ன சிறப்பான வசதிகள் உள்ளது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழக்கூடும். அவற்றிற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அனைத்துத்தகவல்களையும் இதில் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எஸ்பிஐ பல்ஸ் கார்டினை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 1499 செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். இப்படி வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூபாய் 4999 மதிப்புள்ள நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த கார்டினைப்பயன்படுத்தி ரூ. 2 லட்சம் அல்லது அதிகமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் ஆண்டு சந்தாவில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதோடு மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் தங்களது அவசரத்தேவைகளுக்காக கிரெடிட் கார்டைப்பயன்படுத்தி பல்வேறு மருத்துவப்பலன்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் உடல்நலம் தொடர்பான அனைத்துப்பலன்களையும் எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய கிரெடிடைப் பெறும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் மெடிக்கல் ஷாப், திரைப்படங்கள் பார்ப்பதற்கு மற்றும் வெளியில் சாப்பிடும் போமு இந்த கிரெடிட் கார்டினைப்பயன்படுத்தினால் 5x போனஸ் புள்ளிகள வாடிக்கையாளர்களைப்பெற முடியும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக Fitpass Pro-வின் ஓராண்டு முதல் இலவச மெம்பர்ஷிப்-வுடன் எஸ்பிஐ பல்ஸ் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் 4,000 ஜிம்கள் மற்றும் ஃபிட்னஸ் ஸ்டுடியோக்களின் நெட்வொர்க் அணுகலைப் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி, யோகா, நடனம் மற்றும் கார்டியோ போன்ற மெய்நிகர் உடற்பயிற்சி திட்டங்களுக்கு வரம்பற்ற அணுகலையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கார்டைப்பயன்படுத்தி ரூ. 1 லட்சம் வரை இன்சுரன்ஸ் பெற முடியும் எனவும், விமான விபத்துக் காப்பீடாக ரூபாய் 50 லட்சம் வரை பெற்றுக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.