மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 2022 மற்றும் 23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தொடர்பாக சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பலரும் பலவிதமான கருத்துகளை கூறிவருகின்றனர். தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பட்ஜெட் தொடர்பாக தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஒரே நாடு ஒரே ஆவணப் பதிவு திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: வருமான வரியில் எந்தவித மாற்றத்தையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: விவசாயம், தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி. தினகரன்: காவிரி - பெண்ணாறு இணைப்புத்திட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: மத்திய அரசின் பட்ஜெட் நனைந்துபோன பட்டாசு போல இருக்கிறது.
திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன்: பட்ஜெட் மாநில உரிமையை பாதிக்கும் விதமாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே பத்திரம் என்பது மாநில அரசின் வருவாயை பாதிக்கும். இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு என எதுவும் இல்லை.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்: கார்ப்பரேட்களுக்கு வெண்ணெய், உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்