மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றம் கிடைத்துள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனிநபர் வருமானம் ஈட்டும் பணியாளர்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என அவர்களிடம் கருத்து கேட்டோம். இதோ அவர்களின் குரல்கள்...


 


ஜேம்ஸ் - கோவை மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம்:


 



ஜேம்ஸ்


 


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு இந்தாண்டும் மாற்றம் செய்யப்படவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வருமான வரி உச்ச வரம்பு மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அதேபோல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு அளித்திருக்கும் முக்கியத்துவத்தை தனி நபர்களுக்கும், சிறு, குறு தொழில் நிறுவனங்களும் அளிக்கப்படவில்லை.


அவினாஷ், தனியார் நிறுவன ஊழியர், சென்னை:


 



அவினாஷ்


வருடம் வருடம் அனைத்து விலை வாசிகளும் 8 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது ஆனால் ஊதியம் 10% உயர்த்தினாலும் பிடிப்புகள் போக 5 சதவீதம் தான் கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் குறிப்பிட்ட அளவு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஊதியத்திற்கு ஏற்றார்போல் தற்போது உள்ள காலகட்டத்தில் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதனால் மருத்துவச் செலவுகள் உட்பட அனைத்து செலவுகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளி கட்டணம் அத்தியாவசிய  பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது வெளியான பட்ஜெட்டில் எங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.


 


கேசவன், தனியார் நிறுவன ஊழியர், விழுப்புரம்: 


 



கேசவன்


விலைவாசி 10 முதல் 15 சதவீதம் உயர்ந்து வருகிறது. ஊதியம்  உயர்த்தினாலும் பிடிப்புகள் போக தான் கிடைக்கிறது.  ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.  ஊதியத்திற்கு ஏற்றார்போல் தற்போது உள்ள காலகட்டத்தில் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதனால் மருத்துவச் செலவுகள் உட்பட அனைத்து செலவுகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளி கட்டணம் உட்பட அத்தியாவசிய  பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியான பட்ஜெட்டில் எங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி மாற்றம் செய்திருப்பார்கள் என எதிர்பார்த்து இருந்தோம் ஆனால் எதுவும் செய்யவில்லை.


 நாறும்பூநாதன், எழுத்தாளர், நெல்லை: 


 



 நாறும்பூநாதன்


தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை என்பது  மத்திய தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஏமாற்றமே,  தனி நபர் உச்சவரம்பில்  மாற்றமில்லை என்பதை மத்திய தர வர்க்கத்தினர் பார்வையில் மட்டுமே நான் பார்க்கவில்லை, மத்திய தர வர்க்க மக்கள் எப்போதும் தனக்கு ஏதாவது சலுகை இருக்கிறதா என்றே பார்ப்பார்கள். ஆனால் அதை மட்டுமே பார்க்க கூடாது, அதையும் தாண்டி பார்க்க வேண்டும், வேறு யாருக்கு சலுகை கொடுத்து இருக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும், அப்போது தான் நாம் சமூகத்திற்கான மனிதராக இருக்க முடியும். அப்படி பார்த்தால் கார்ப்பரேட்டுக்கு 12% இல் இருந்து 7 சதவிகிதமாக குறைத்து இருப்பதையும், அதிக லாபம் தரக்கூடிய எல்ஐசியை தனியாருக்கு விற்பனை செய்வதையும், வங்கியையும் தபால் துறையையும் இணைப்பதையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது, மொத்தத்தில் இந்த பட்ஜெட் பணம் படைத்தவர்களுக்கான பட்ஜெட்டே தவிர ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் அல்ல என  தெரிவித்தார்.


பழனிவேல், ஓய்வு பெற்ற பேராசிரியர், தஞ்சை: 


 



பழனிவேல்


மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி செலுத்துவோர், மத்திய மாநில அரசு ஊழியர்கள் ,தனியார் துறை உயர் பதவி வகிப்பவர்கள் பட்ஜெட்டில் வருமானவரித் துறையில் புதிய சலுகைகள் மாற்றங்கள் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.  ஆனால் எந்த ஒரு புதிய சலுகையை அறிவிக்காமல் மகாபாரதத்தை, வரி செலுத்துவதற்கு மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நன்றி தெரிவித்து இருப்பது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண