கிரிப்டோகரன்சியை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் சார்பில் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் ருபி அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். 


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பில், ரிசர்வ் வங்கி சார்பில் கிரிப்டோகரன்சி வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் ரூபாய் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் கரன்சி மூலம் இணையபரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார்.




கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி, பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு முதலீட்டாளர்களும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் காட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற கருத்துக்கள் பரவியது.


இந்த சூழலில்தான் இந்தியாவில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக ஏதும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவராமலே இருந்தது. இந்த சூழலில், நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது முக்கிய அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில்தான் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.




இந்த டிஜிட்டல் ருபி எனப்படும் டிஜிட்டல் கரன்சியானது பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்பட இருப்பதால், இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை இதில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


கிரிப்டோன்சிக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டிருப்பதால், டிஜிட்டல் கரன்சிக்கும் கணிசமாக வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதால் இதன் மீது அனைவரும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துவதால் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வும் ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க : Budget 2022: ‛தபால் வங்கி கணக்கு இருந்தால்... வங்கி பண பரிமாற்றம் செய்யலாம்...’ -பட்ஜெட்டில் அறிவிப்பு!


மேலும் படிக்க : Budget 2022 Memes: வரிச்சலுகை ஏமாற்றம்... வரிவரியாய் வரிசை கட்டும் மீம்ஸ்கள்!


மேலும் படிக்க : Union Budget 2022: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண