நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் கூட்டுறவு சங்ககளுக்கான வரிகள் 18சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு செலுத்தும் தொகைக்கான டிடிஎஸ் வரம்பு 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விலக்கு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இந்த முறை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை. இது பலரையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே உள்ள 2.5 லட்சம் ரூபாய் என்ற உச்சவரம்பு தொடர்ந்து நீடிக்கிறது. அத்துடன் 5 லட்சம் ரூபாய் வருமான வரை உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்தவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நடைமுறையும் தொடர்ந்து தொடர்கிறது.


 






மேலும் வருமான வரி செலுத்துவோர் தங்களுடைய திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்ய இரண்டு ஆண்டுகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வரி செலுத்துவோர், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது வருமானத்தை அறிவிக்கத் தவறினால், அவர்கள் புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


மேலும் படிக்க: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!


முன்னதாக மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கில் உள்ள முதலாளியின் பங்களிப்பில் வரி விலக்கு வரம்பை 14 சதவீதமாக அதிகரிக்கவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2022-23 மத்திய பட்ஜெட்டில் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணத்தில் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்தார்.அப்பொழுது, ஜிஎஸ்டி வசூலுக்கான ஆரோக்கியமான குறிகாட்டியாக இதைக் கருதலாம் எனவும், 2022 ஜனவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க: Union Budget 2022 Highlights: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!