இந்தியாவின் 2022- 23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரிச்சலுகையை எதிர்பார்த்தனர். ஆனால், நடப்பு நிதிநிலை அறிக்கையில் எந்த வருமானவரிச்சலுகை அறிவிப்பும் இடம்பெறவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். அவற்றில் குறிப்பிட்ட ட்ரோல்களை கீழே காணலாம்.
மிஸ்டர் பீன் தொடரில் மிஸ்டர் பீன் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து கடைசியில் விரக்தியில் படுத்துவிடுவார். அந்த காட்சியை ஒப்பிட்டு நடுத்தர வர்க்கத்தினர் ஏதாவது அவர்களுக்கான அறிவிப்பு வரும் என்று காத்திருந்து கடைசியில் படுத்துவிடுவதாக இந்த மீம்சில் குறிப்பிட்டுள்ளனர்.
கிரிப்டோ கரன்சியின் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் கிரப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் அழுவதை போன்று இந்த ட்ரோல் குறிப்பிடுகிறது.
பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணனின் அறிவிப்புக்காக நாட்டு மக்கள் காத்திருக்கும் காட்சியை குறிப்பிட்டு, நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்பில் நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளியாகுமா? என்று காத்திருப்பது போல இந்த ட்ரோல் உள்ளது.
இந்த நபர் தனது டுவிட்டர் பக்கத்தில், நிர்மலா சீதாராமனிடம் மேடம் வரி செலுத்துபவர்களுக்கு ஏதும் அறிவிப்பு உள்ளதா? என்று நிர்மலா சீதாராமனிடம் கேட்பது போலவும், நிர்மலா சீதாராமன் அதற்கு உங்களது பங்களிப்பிற்கு நன்றி என்று கூறுவது போலவும் இவரது டுவிட் உள்ளது.
யோகேஷ் என்பவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில், கண்டிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமில்லை. வரி செலுத்துபவர்களுக்கு பாராட்டு மட்டுமே கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வருமான வரி அறிவிப்பில் எந்த மாற்றமுமில்லை. இந்தியாவில் மிகவும் சுரண்டப்படும் மக்கள் நடுத்தர வர்க்கத்தினர். அவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு சமூக வலைதளங்களில் பட்ஜெட் குறித்து மீம்ஸ்களும், ட்ரோல்களும் கலவையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்