மேலும் அறிய

Year End Car Offers: கார் மாடல்களுக்கு தள்ளுபடியை அள்ளி வீசிய மாருதி சுசுகி - ரூ.2.3 லட்சம் வரை விலை குறைப்பு

Year End Car Offers 2023: ஆண்டு இறுதியை ஒட்டி மாருதி சுசுகி நிறுவனம் தனது பல்வேறு கார் மாடல்களுக்கு, விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Year End Car Offers 2023: ஆண்டு இறுதியை ஒட்டி பல்வேறு கார் மாடல்களுக்கு மாருதி சுசுகி நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ள சூழலில், அதிகபட்சமாக ஜிம்னி மாடலுக்கு ரூ.2.3 லட்சம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதி சலுகை:

நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டு இன்னும் விற்பனை நிலையங்களில் உள்ள பல்வேறு மாடல் கார்களுக்கும், மாருதி சுசுகி நிறுவனம் ஏராளமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. விற்பனை நிலையங்களில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்டோ 800 தொடங்கி டிசைர் வரையிலான பல்வேறு மாடல்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது. 

Maruti Suzuki Alto 800:

ஆல்டோ 800 மாடல் காரின் உற்பத்தியில் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மீதமுள்ள யூனிட்களை விற்று தீர்க்க டீலர்கள் முயற்சிக்கின்றனர். அதன்படி,  மாருதி சுசுகி நிறுவனம் CNG உட்பட அனைத்து வேரியண்களுக்கும் ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. ஆல்டோ 800 இன் விலை ரூ. 3.54 லட்சத்தில் இருந்து ரூ.5.13 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Maruti Suzuki Alto K10:

ஆல்டோ கே10 மாடலில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரண்டு வகைகளிலும், ரூ.54,000 மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதில் ரூ.35,000 வரை கேஷ் டவுன் தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். சிஎன்ஜி வகைகளுக்கு ரூ.25,000 வரை ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. ஆல்டோ கே10 காரின் விலை ரூ.3.99 லட்சம் தொடங்கி ரூ.5.96 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki S-Presso:

எஸ்-பிரஸ் மாடல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி டிரிம்கள் இரண்டிலும் ஒரு பெரிய தள்ளுபடி ஒப்பந்தம் கிடைக்கிறது. தள்ளுபடியின்படி, AMT மற்றும் மேனுவல் உட்பட அனைத்து டிரிம்களிலும் ரூ.59,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதில் ரூ.35,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். சிஎன்ஜி பதிப்புகள் ரூ.35,000 மற்றும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் மொத்தமாக ரூ.55,000 வரை கிடைக்கும். எஸ்-பிரஸ்ஸோ விலை ரூ.4.26 லட்சம் தொடங்கி ரூ.6.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Maruti Suzuki Eeco:

மாருதி சுசுகியின் Eeco பயணிகள் பதிப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் ஷெல் ஆகிய மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதில் பயணிகள் வேனுக்கான தள்ளுபடியின்படி,  Eeco இன் பெட்ரோல் பதிப்பில் ரூ. 29,000 மதிப்புள்ள மொத்த சலுகை உள்ளது. இதில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். மறுபுறம் Eeco CNG மாடலுக்கு, ரூ. 15,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ. 10,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. இந்த வேன் விலை ரூ.5.27 லட்சம் தொடங்கி ரூ.8.27 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுள்ளது.

Maruti Suzuki WagonR:

 வேகன்ஆர் பெட்ரோல் வேர்யண்டிற்கு ரூ.54,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி,  ரூ.30,000 ரொக்க போனஸ், 7 ஆண்டுகளுக்கு குறைவான காருக்கு ரூ.20,000 வரையிலும், பழைய வாகனத்திற்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட டிரிம்களில் ரூ.4,000 வரை கூடுதல் கார்ப்பரேட் சலுகையும் உள்ளது. 4,000 கார்ப்பரேட் சலுகையை தவிர்த்து, வேகன்ஆர் சிஎன்ஜி அதன் பெட்ரோல் வேர்யண்டிற்கான அதே சலுகையை பெறுகிறது. வேகன்ஆர் காரின் விலை ரூ.5.54 லட்சம் தொடங்கி ரூ.7.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Celerio:

செலிரியோ மாடலுக்கு ரூ.35,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. CNG மாடலுக்கு கார்ப்பரேட் தள்ளுபடி இல்லாததால்,  அதற்கு ரூ.55,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் விலை ரூ.5.36 லட்சத்தில் இருந்து ரூ.7.14 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Swift:

ஆண்டு இறுதியை ஒட்டி ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடலில் AMT மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டுக்கும், ரூ.54,000 வரையிலான பலன்கள் கிடைக்கிறது. இதில் ரூ.30,000 ரொக்க தள்ளுபடி, கார் 7 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் ரூ.20,000 வரையிலும்,  பழைய காருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. தொடக்க நிலை LXi பதிப்பு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் மட்டுமே கிடைக்கும். 4,000 கார்ப்பரேட் சலுகையும் உள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்விஃப்ட் பெட்ரோலுக்கு மட்டுமே கிடைக்கும். 

Maruti Suzuki Dzire:

மாருதி சுசுகி டிசையர் மீது ரூ. 20,000 மதிப்பிலான அரிய தள்ளுபடியை வழங்குகிறது. இதில் ரூ. 10,000 ரொக்க  சலுகையாகவும் மற்றும் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகவும் வழங்கப்படுகிறது. டிசையர் சிஎன்ஜியில் தள்ளுபடி இல்லை. 

Maruti Suzuki Jimny: 

ஜிம்னி கார் மாடலின் இரண்டு வேரியண்ட்களின் விலையையும் மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே, 2 லட்சம் வரை டிசம்பர் மாத தொடக்கத்தில் அந்நிறுவனம் குறைத்தது. இந்நிலையில் சில டீலர்கள் தனிப்பட்ட முறையில் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget