மேலும் அறிய

Yamaha EC-06: சிங்கம் களமிறங்கிடுச்சே.! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யமாஹா EV பைக் வருகிறது; விலை, அம்சங்கள் என்ன.?

Yamaha EC-06 Electric Scooter: யமாஹாவின் EC-06 மின்சார ஸ்கூட்டர் தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் வடிவமைப்பு, ரிவர் இண்டியுடன் ஒத்ததாக இருக்கிறது.

மின்சார இருசக்கர வாகன சந்தையில், பிரபலமான மற்றும் பிரதான நிறுவனங்கள், அதாவது டிவிஎஸ், பஜாஜ், சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவர்களின் இவி ஸ்கூட்டர்களை களமிறக்கிவிட்ட நிலையில், யமாஹா நிறுவனத்தின் இவி பதிப்பை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், யமஹா, EC-06 மின்சார ஸ்கூட்டரை களமறக்கியுள்ளது. இதன் விலை 1.68 லட்சம் ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரிவர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கம்

யமஹா இந்த பிரிவில் நுழைவது இதுவே முதல் முறை. மேலும், அதன் முதல் மின்சார பதிப்பு ரிவர் நிறுவனத்துடன் உடன்  இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், ரிவர் இண்டி மின்சார ஸ்கூட்டரின் சில ஒற்றுமைகளை இந்த யமாஹா ஸ்கூட்டரில் காண முடிகிறது. இந்த ஸ்கூட்டர் தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்கிறது.

பேட்டரி திறன், ரேஞ்ச் என்ன.?

இந்த யமாஹா EC-06 மின்சார ஸ்கூட்டர், ரிவர் இண்டியில் உள்ள அதே 4kw பேட்டரி பேக்குடன் வருகிறது. மேலும்,  இதன் ரேஞ்ச் 169 கிலோ மீட்டர்(IDC) என்று கூறப்படுகிறது. இது இண்டியைப் போலவே, அதே அளவு சக்தியை உருவாக்குகிறது. அதே நேரத்தில், ரேஞ்ச் சற்று அதிகமாக உள்ளது. பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிலோ மீட்டர் உத்தரவாதத்துடன் வரும் EC-06-ஐ, சுமார் எட்டு மணி நேரத்தில் முழு சார்ஜ் செய்யலாம்.

வடிவமைப்பு, அம்சங்கள்

ரிவர் இண்டியை விட இந்த ஸ்கூட்டரின் ஸ்டைலிங் சிறப்பாக இருக்கிறது. சில செயல்பாட்டு வடிவமைப்புகள் தக்கவைக்கப்பட்டிருந்தாலும், நேர்த்தியாகத் தெரிகிறது. அம்சங்களை பொறுத்தவரை, எல்சிடி திரை, ரிவர்ஸ் அசிஸ்ட் மற்றும் பல ரைட் மோட்-கள் உள்ளன. இருக்கைக்கு அடியில் 24.5 லிட்டர் சேமிப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Yamaha EC-06: சிங்கம் களமிறங்கிடுச்சே.! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யமாஹா EV பைக் வருகிறது; விலை, அம்சங்கள் என்ன.?

சந்தை நிலைப்படுத்தல் மற்றும் விலை நிர்ணயம்

புதிய தயாரிப்புகளை சந்தையில் விரைவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் யமஹா தனது இந்திய செயல்பாடுகளையும் நெறிப்படுத்தியுள்ளது. EC-06 ஒரு மறுபரிசீலனை செய்யப்பட்ட தயாரிப்பு அல்ல என்பது நமக்கு பிடித்திருக்கிறது. ஆனால், இந்த போட்டி சந்தையில் உள்ள மற்றவற்றுடன் ஒப்பிடும்போது, இப்போது இதன் விலை அதிகமாகவும் இருக்கிறது.

இண்டி மற்றும் EC-06 இரண்டும் தோற்றத்தில் வேறுபட்டவை என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, விலை வேறுபாடு குறைவாக இருந்திருக்க வேண்டும். யமஹா தற்போது இந்த தயாரிப்பை வரையறுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே சோதித்து வருகிறது. எல்லா சந்தைகளிலும் அல்ல.

Frequently Asked Questions

யமஹா EC-06 மின்சார ஸ்கூட்டர் விலை என்ன?

யமஹா EC-06 மின்சார ஸ்கூட்டர் 1.68 லட்சம் ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யமஹா EC-06 ஸ்கூட்டர் எந்த நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது?

யமஹா EC-06 ஸ்கூட்டர் ரிவர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், ரிவர் இண்டி ஸ்கூட்டரின் சில ஒற்றுமைகள் இதில் காணப்படுகின்றன.

யமஹா EC-06 ஸ்கூட்டரின் பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் என்ன?

இந்த ஸ்கூட்டர் 4kw பேட்டரி பேக்குடன் வருகிறது. இதன் ரேஞ்ச் 169 கிலோ மீட்டர் (IDC) என்று கூறப்படுகிறது. பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கி.மீ. உத்தரவாதம் உண்டு.

யமஹா EC-06 ஸ்கூட்டரில் என்ன அம்சங்கள் உள்ளன?

இதில் எல்சிடி திரை, ரிவர்ஸ் அசிஸ்ட் மற்றும் பல ரைட் மோட்-கள் உள்ளன. இருக்கைக்கு அடியில் 24.5 லிட்டர் சேமிப்பு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
Honda QC3 Vs TVS iQube: ஹோண்டா QC3-ஆ.? டிவிஎஸ் ஐக்யூபா.? எந்த EV ஸ்கூட்டர் சிறந்தது.? விலை, ரேஞ்ச், அம்சங்கள் ஒப்பீடு இதோ
ஹோண்டா QC3-ஆ.? டிவிஎஸ் ஐக்யூபா.? எந்த EV ஸ்கூட்டர் சிறந்தது.? விலை, ரேஞ்ச், அம்சங்கள் ஒப்பீடு இதோ
15 லட்சம்தான் பட்ஜெட்.. மைலேஜை அள்ளித் தரும் டாப் 8 மின்சார கார்கள் - இதான் லிஸ்ட்
15 லட்சம்தான் பட்ஜெட்.. மைலேஜை அள்ளித் தரும் டாப் 8 மின்சார கார்கள் - இதான் லிஸ்ட்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Embed widget