மேலும் அறிய

Volkswagen Tayron Price: சக்தி, சொகுசு, பாதுகாப்பு; அசத்தலான வோக்ஸ்வாகன் டெய்ரான் ஆர் லைன்; வெளியான விலை விவரங்கள்

Volkswagen Tayron Price India: வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் அதன் புதிய டெய்ரானின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ப்ரீமியம் எஸ்யூவியின் விலை, அம்சங்கள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இந்தியாவில் தனது SUV வரிசையை வலுப்படுத்தும் விதமாக, வோக்ஸ்வாகன் அதன் புதிய முழு அளவிலான SUV-யான 7 இருக்கைகள் கொண்ட டெய்ரான் ஆர்-லைன்-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அதன் விலையையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது, இந்த ப்ரீமியம் எஸ்யூவியின் விலை மற்றும் அம்சங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

வோக்ஸ்வாகன் டெய்ரான் ஆர்-லைனின் விலை என்ன.?

வோக்ஸ்வாகன் நிறுவனம், அதன் புதிய ப்ரீமியம் 7 சீட்டர் காரான டெய்ரான் ஆர்-லைனுக்கான முன்பதிவை இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், தற்போது அதன் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த எஸ்யூவி 46.99 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிகுவானைப் போல் இல்லாமல், டெய்ரான் இந்தியாவில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இது முழுமையாக ஏற்றப்பட்ட ஒற்றை R-லைன் வேரியண்டில் வழங்கப்படுகிறது.

டெய்ரானின் பேட்டியாளர்கள் யார்.?

புதிய டெய்ரான் ஆர்-லைன், அதன் பிரிவில் டொயோட்டா ஃபார்ட்சுனர், ஸ்கோடா கோடியாக், எம்ஜி க்ளோஸ்டர், ஜீப் மெரிடியன் மற்றும் எம்ஜி மெஜஸ்டர் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. அதனால், அவற்றுடன் ஒத்த விலையில் இந்த எஸ்யூவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ப்ரீமியம் டிசைன் மற்றும் அம்சங்கள்

டிசைனை பொறுத்தவரை, புதிய டெய்ரான் ஆர்-லைன் காரானது, முதல் பார்வையிலேயே ஈர்க்கிறது. HD மேட்ரிக்ஸ் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களுடன் கூடிய IQ லைட்கள், பம்பர் மற்றும் முன்புற கதவுகளில் ஸ்போர்ட்டி ஆர்-லைன் டிசைன் அம்சங்கள் இடம்பெற்றிருப்பது கவரும் விதமாக இருக்கிறது. 19 இன்ச் காவெண்ட்ரி அலாய் வீல்கள் உடன் முன் மற்றும் பின்பக்கத்தில் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வாகன் லோகோக்களும் இடம்பெற்றுள்ளன.

உட்புற அம்சங்களை பொறுத்தவரை, பனோரமிக் சன்ரூஃப், எர்கோனோமிக் சீட்டிங் மற்றும் இந்த பிரிவில் உள்ள கார்களில் முதலமுறையாக 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனுடன், 10.25 இன்ச் டிஜிட்டல் காக்பிட், ஆகுமெண்டர் ரியாலிட்டி டிஜிட்டல் டிஸ்பிளே, இரண்டு சாதனங்களுக்கு வயர்லெஸ் போன் சார்ஜிங், மெமரி ஃபங்க்சனுடன் கூடிய 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய எலெக்ட்ரிகல் சீட், காற்றோட்டம் மற்றும் மசாஜ் செய்யும் முன் இருக்கைகள் மற்றும் லம்பர் சப்போர்டும் வழங்கப்பட்டுள்ளது. 30 வண்ணங்களுடன் கூடிய ஆம்பியண்ட் லைட்டிங்கும்  இந்த டெய்ரானை மிகவும் ப்ரீமியமாக மாற்றுகிறது.

பின்புறத்தில், SUV தெளிவான மற்றும் பிரீமியம் தோற்றத்தைப் பராமரிக்கும் அதே வேளையில், திருத்தப்பட்ட டெயில்-லேம்ப்புகளைப் பெறுகிறது.

சக்திவாய்ந்த 2.0 TSI எஞ்சின்

புதிய டெய்ரான் ஆர்-லைனை இயக்குவது, 2.0 லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆகும். இது, 200 bhp மற்றும் 320 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது 7-ஸ்பீட் DSG தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் வோக்ஸ்வாகனின் 4Motion ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கூடுதல் இழுவைத் திறனுடன், வலுவான செயல்திறனை உறுதி செய்கிறது.

இந்த கார், வெறும் 7.3 விநாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக மணிக்கு 224 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

டெய்ரான் ஆர்-லைனில், ப்ரீமியம் அம்சங்கள் மட்டுமல்லாமல், பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ட்ரைவர் அசிஸ்டன்ஸ் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதில் 9 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் அசெண்ட் மற்றும் டிசெண்ட் கன்ட்ரோல், 14 மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் அசிஸ்ட் வசதிகளுடன் கூடிய லெவல் 2 ADAS ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மொத்தத்தில், போட்டியாளர்களுக்கு கடும் பேட்டியை கொடுக்கும் அளவிற்கு சரியான விலையுடன், இந்த வோக்ஸ்வாகன் டெய்ரான் ஆர்-லைன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?

Embed widget