மேலும் அறிய

Volkswagen Golf GTI: 150ம் வித்துருச்சுன்னு வருத்தமா? 100 யூனிட்களை புதுசா இறக்கும் ஃபோக்ஸ்வேகன் - அப்படி என்ன தான் இருக்கு?

Volkswagen Golf GTI: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கூடுதலாக 100 கோல்ஃப் ஜிடிஐ மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர ஃபோக்ஸ்வேகனின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Volkswagen Golf GTI: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கூடுதலாக 100 கோல்ஃப் ஜிடிஐ மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர  ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ - கூடுதலாக 100 யூனிட்கள்:

ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய காரான கோல்ஃப் ஜிடிஐ-யின் 150 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்து அதற்கான முன்பதிவையும் தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அனைத்து யூனிட்களுக்குமான முன்பதிவும் நடந்து முடிந்தது. தேவை அடிப்படையில் மேலும் 100 யூனிட்களை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்  அறிவித்துள்ளது. நடப்பாண்டு இறுதியிலேயே இரண்டாவது பேட்சுக்கான முன்பதிவு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதுபோக, வரும் 26ம் தேதியன்று கோல்ஃப் ஜிடிஐ-யின் விலை அறிவிக்கப்பட்ட பிறகு முதல் பேட்ச்சில் முன்பதிவு செய்வதவர்கள் சிலர் அதனை ரத்து செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் சிலருக்கும் கோல்ஃப் ஜிடிஐ காரை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டாவது பேட்ச்சில் முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த ஆண்டில் தான் கார் டெலிவெரி செய்யப்பட உள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி?

கோல்ஃப் ஜிடிஐ மாடலுக்கான முன்பதிவை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நூதனமாக மேற்கொண்டது. அதன்படி, ஃபோக்ஸ்வேகன் சார்பில் ஆன்லைனில் நடத்தப்படும் ஃக்விஸ் போட்டியில் பங்கேற்று ஐந்திற்கு நான்கு மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே, முன்பதிவு செய்வதற்கான லிங்கை பயனர்கள் பெற முடியும். இந்த லிங்கில் ஒரு மொபைல் நம்பருக்கு ஒரு எண்ட்ரியை மட்டுமே மேற்கொள்ள முடியும். அதன்படி, இந்த லிங்கில் நுழைந்து தேவையான தகவல்களை பதிவிட்டு ஃபோக்ஸ்வேகனின் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலுக்கு முன்பதிவு மேற்கொள்ளலாம். முதல் பேட்ச்சில் முன்பதிவு செய்தவர்களுக்கு வரும் ஜுன் மாதம் முதல் கார்கள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வேகனின் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலின் ஷோ ரூம் விலை சுமார் 53 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிகள் அனைத்தும் சேர்த்து வாங்கும்போது, ஆன் - ரோட் விலை சில மாநிலங்களில் 60 லட்சம் ரூபாயை கடக்கலாம். இந்திய சந்தையில் ரூ.44.90 லட்சம் முதல் ரூ.55.90 லட்சம் வரையிலான விலையை கொண்ட 2 டோர் மினி கூப்பர் எஸ் மாடலுக்கும், அதிக சக்தி வாய்ந்த ரூ.94.80 லட்சம் மதிப்பிலான மெர்சிடஸ் AMG A 45 S கார் மாடலுக்கும் இடையே புதிய கோல்ஃப் ஜிடிஐ இடம்பெற உள்ளது. இதனிடையே, அதிக சக்தி வாய்ந்த 328hp ஆல்-வீல் ட்ரைவ் திறன் கொண்ட கோல்ஃப் R மற்றும் டைனமிக் சேசிஸ் கொண்ட ஜிடிஐ  கார் மாடலும் எதிர்காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஜின் விவரங்கள்:

இந்தியாவிற்கான கோல்ஃப் ஜிடிஐ கார் மாடல் 265hp மற்றும் 370 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். அண்மையில் ஃபோக்ஸ்வேகன் சார்பில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டைகுன் R-Line-ஐ காட்டிலும், இந்தியாவில் அதிக சக்தி வாய்ந்த அந்நிறுவனத்தின் கார் மாடலாக கோல்ஃப் ஜிடிஐ கார் உருவெடுக்கும். இதில் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச்  ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் சிஸ்டத்திற்கும், எலெக்ட்ரானிகல்லி கண்ட்ரோல்ட் ஃப்ரண்ட் ஆக்சல் டிஃப்ரென்ஷியல் லாக்கிற்கு ஆற்றல் விநியோகிக்கப்படுகிறது. இதனால், வெறும் 5.9 விநாடிகள் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை கோல்ஃப் ஜிடிஐ கார் எட்டும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஹேட்ச்பேக் பயணிக்கும். 

கோல்ஃப் ஜிடிஐ - உட்புற, வெளிப்புற அம்சங்கள்:

எல்இடி முகப்பு விளக்குகளுக்கு மத்தியில் VW என்ற ஒளிரூட்டப்பட்ட லோகோக்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புற பம்பரானது X வடிவிலான ஃபாக் லைட் கொண்டுள்ளது. முன்புற கதவுகளில் GTI பேட்ஜை பெறுகிறது. 18 இன்ச் அலாய் வீல்கள், ஸ்மோக்ட் எல்இடி டெயில் லைட்ஸ், ரூஃப் ஸ்பாய்லர், ட்வின் எக்சாஸ்ட் டிப்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. கிரெனடில்லா பிளாக், ஓரிக்ஸ் ஒயிட், மூன்ஸ்டோன் கிரே பிளாக் மற்றும் கிங்ஸ் ரெட் ஆகிய 4 வண்ண விருப்பங்களில் இந்த கார் விற்பனை சந்தைப்படுத்தப்பட உள்ளது.

உட்புறத்தில் GTI பேட்ஜ் உடன் கூடிய லெதர் ரேப் செய்யப்பட்ட ஸ்டியரிங் வீலை கொண்டுள்ளது.  அதோடு, பேடல் ஷிஃப்டர்ஸ், 12.9 இன்ச் டச்-ஸ்க்ரீன், 10.25 இன்ச் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே, 7 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், டார்டன் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய அம்சங்களும் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெஸ்ட் சாய்ஸ்...NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சியரா EV
குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெஸ்ட் சாய்ஸ்...NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சியரா EV
Mini Cooper EV: நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கட்டணச்சலுகை, சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் சொன்ன செய்தி என்ன?
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கட்டணச்சலுகை, சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் சொன்ன செய்தி என்ன?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
Embed widget