மேலும் அறிய

ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் போகலாம்! அசத்தும் ஆஃப் ரோட் இ பைக் Ultraviolette Shockwave - விலை எவ்ளோ?

ஆஃப் ரோட் மின்சார பைக்கான Ultraviolette Shockwave-ன் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்திய சந்தையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இ ஸ்கூட்டர்களின் விற்பனையே அதிகளவில் இருந்து வரும் நிலையில், இ பைக்குகளின் விற்பனையையும் அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனமும் ஆர்வம் காட்டி வருகிறது. 

Ultraviolette Shockwave:

நெடுஞ்சாலையில் செல்வதற்கும் ஆஃப் ரோடில் செல்வதற்கும் ஏற்ப பல்வேறு நிறுவனங்களும் இ பைக்குகளை தயாரித்து வருகிறது. இந்திய சந்தையில் தனக்கென தனி இடம் பிடிக்க ஆர்வம் காட்டி வரும் மின்சார வாகன நிறுவனம் Ultraviolette. இவர்களின் Ultraviolette Shockwave இ பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

விலை என்ன?

இந்த Ultraviolette Shockwave இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 82 ஆயிரத்து 213.  இதன் தோற்றம், வடிவம் பார்ப்பவரை கவர்ந்து இழுக்கும். ஒரு நீண்ட தூரம் பயணிக்கும் பறவையின் தோற்றம் போன்று இதன் வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஃப் ரோட் வாகனத்தின் தோற்றத்துடன் இந்த Ultraviolette Shockwave உருவாக்கப்பட்டுள்ளது. 

மைலேஜ்:

இறக்கையை விரித்து காற்றில் சீறிப்பாயும் பறவையைப் போன்ற தோற்றம் கொண்ட இந்த Ultraviolette Shockwave இ பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக இதில் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த Ultraviolette Shockwave பைக்கின் எடை 120 கிலோ ஆகும். 

இந்த இ பைக்கின் முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. வெண்சிவப்பு மற்றும் கருமஞ்சள் நிறத்தில் இந்த Ultraviolette Shockwave மின்சார பைக் உள்ளது. 505 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ரியல் ரேஞ்சே 145 கிலோமீட்டர் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. பிஎம்எஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி:

இந்த Ultraviolette Shockwave இ பைக்கில் 4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நிரந்தரமான பேட்டரி ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. சுவிட்சபிள் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. 

முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 19 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்ட் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

முன்பக்கம் 37 மி.மீட்டர் கார்ட்ரைட் டைப் சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. 

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலெர்ட், நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது.

பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லொகேஷன் ட்ராக்கிங் வசதி உள்ளது. டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்திலும் எரியும் முகப்பு விளக்குகள் இதுவாகும். ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி ஆகும். சிக்னல் விளக்கு எல்இடி ஆகும். 4 ட்ராக்ஷன் கன்ட்ரோல் மோட் வசதியும் உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget