கருப்பு அரசன் வந்துட்டான்.. டிவிஎஸ்-சின் Apache RR 310 & RTR 310 Black Diamond Edition பைக் எப்படி இருக்கு? விலை எவ்ளோ?
டிவிஎஸ் நிறுவனத்தின் Apache RR 310 மற்றும் RTR 310 பைக்கின் Black Diamond Edition அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ். டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்கள் Apache RR 310 மற்றும் Apache RTR 310 ஆகும்.
Black Diamond Editions:
இந்த இரு சக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவை ஆகும். இந்த பைக்கின் புதிய Black Diamond Editions பைக்கை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை எப்படி?
இந்த புதிய RTR 310 Black Diamond Edition பைக்கின் விலை ரூபாய் 2.48 லட்சம் ( எக்ஸ் ஷோரூம்) மற்றும் RR 310 பைக்கின் விலை ரூபாய் 2.87 லட்சம். இந்த இரண்டு பைக்குகளிலும் எலக்ட்ரானிக்ஸ் ரைடர் அய்ட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. கார்னரிங் ஏபிஎஸ் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல் மற்றும் ட்ராக் டார்க் கன்ட்ரோல் வசதி உள்ளது. இதில் 5 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்.
RR 310 பைக்கில் 312.2 சிசி லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ரிவர்ஸ் இன்சிலிண்ட் சிங்கிள் சிலிண்டர் வசதி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 38 பிஎஸ், 9800 ஆர்பிஎம் மற்றும் 29 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதில் 6 கியர்பாக்ஸ் வசதி உள்ளது. அதிகபட்சமாக 164 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 60 கி.மீட்டர் வேகத்தை 2.82 நொடிகளில் எட்டலாம்.
டாப் ஸ்பீட்:
RTR 310 பைக்கில் 312.12 சிசி லிக்யூட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் வித் எலக்ட்ரானிக் த்ரோட்டல் கன்ட்ரோல் வசதி கொண்டது. இது 35.6 பிஎஸ், 9 ஆயிரத்து 700 ஆர்பிஎம் மற்றும் 28.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 60 கிலோமீட்டர் வேகத்தை 2.81 நொடிகளில் எட்டும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 810 மி.மீட்டர் ஆகும்.
RR 310 பைக்கில் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எடை 174 கிலோ கொண்டது. 11 லிட்டர் பெட்ரால் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. RTR 310 பைக்கில் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டரும், எடை 169 கிலோவும் ஆகும். டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளது. இருக்கை உயரம் 800 மி.மீட்டர் ஆகும். டிவிஎஸ் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் அவர்கள் வாடிக்கையாளர்களை கவரவும், போட்டி நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு புதிய வேரியண்ட்களையும், எடிஷனையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஸ்போர்ட்ஸி வசீகரமான தோற்றத்தில் அறிமுகமாகியுள்ள இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று டிவிஎஸ் நிறுவனம் நம்புகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















