மேலும் அறிய

Upcoming Mid-Size SUV: EV தொடங்கி ஹைப்ரிட் வரை..! புதுசா வரும் 5 மிட்-சைஸ் SUVக்கள், எல்லாமே பட்ஜெட் மாடல்கள்

Upcoming Mid-Size SUV: இந்திய கார் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 5 மிட்-சைஸ் எஸ்யுவி மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Upcoming Mid-Size SUV: இந்திய கார் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 5 மிட்-சைஸ் எஸ்யுவி மாடல்கள் குறித்தான சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

புதுசா சந்தைக்கு வரும் 5 மிட்-சைஸ் எஸ்யுவிக்கள்:

இந்திய கார் சந்தையில் எஸ்யுவிக்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும், புதிய கார் மாடல்களின் எண்ணிக்கை என்பது இந்த ஆண்டு முழுவதும் குறையப்போவதாக தெரியவில்லை. டாடா, மஹிந்த்ரா, டொயோட்டா, நிஸ்ஸான் மற்றும் ஸ்கோடா போன்ற முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து, புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்த தயாராக வருகின்றன. அந்த வாகனங்கள் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

EV தொடங்கி ஹைப்ரிட் வரை..! 

1. டாடா சியாரா மின்சார எடிஷன்

இன்ஜின் எடிஷனில் ஏற்கனவே விற்பனையில் உள்ள சியாராவின் மின்சார எடிஷனை அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யுவியில் ஹாரியர் மின்சார எடிஷனில் உள்ள இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் அப்படியே பகிரப்பட அதிக வாய்ப்புள்ளதாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதன் தொடக்க விலை 18 லட்சத்தில் தொடங்கி 20 லட்சம் ரூபாய் வரை நீளும் என கூறப்படுகிறது. 

2. மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட்

மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ என் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளதாம். அப்போது இதில் பெரிய டச்ஸ்க்ரீன், புதிய அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சிறிய அப்டேட்களில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட க்ரில், திருத்தப்பட்ட லைட்டிங், புதிய அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். அதேநேரம், இதன் பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது.



Upcoming Mid-Size SUV: EV தொடங்கி ஹைப்ரிட் வரை..! புதுசா வரும் 5 மிட்-சைஸ் SUVக்கள், எல்லாமே பட்ஜெட் மாடல்கள்

3. டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா

அண்மையில் சந்தைப்படுத்தப்பட்ட மாருதி சுசூகி இ-விட்டாராவின் அதே ஹார்டெக்ட் இ-ப்ளாட்ஃபார்மையே டொயோட்டாவின் புதிய அர்பன் க்ரூசர் எபெல்லா கார் மாடல் பயன்படுத்துகிறது. அதேநேரம், இந்த புதிய மின்சார எஸ்யுவி ஆனது அர்பன் க்ரூசர் BEV கான்செப்ட் அடிப்படையில் டிசைனில் சில மாற்றங்களை பெறுகிறது. இதில் 49KWh மற்றும் 61KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் இடம்பெறுகிறது. பெரிய பேட்டரியானது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 543 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்குமாம். இதன் கேபினில் தாராளமாக அம்சங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளனவாம். இதன் விலை வரம்பானது 18 லட்சம் தொடங்கி 25 லட்சம் வரை நீளும் என கூறப்படுகிறது. 


Upcoming Mid-Size SUV: EV தொடங்கி ஹைப்ரிட் வரை..! புதுசா வரும் 5 மிட்-சைஸ் SUVக்கள், எல்லாமே பட்ஜெட் மாடல்கள்

4. ஸ்கோடா கைலாக் ஸ்போர்ட்லைன்

கைலாக் வேரியண்ட்களின் வரிசையில் ஸ்போர்ட்டியான தேர்வாக இணையும் ஸ்கோடா கைலாக் ஸ்போர்ட்லைன், ப்ளாக்ட்-அவுட் வெளிப்புற எலிமெண்ட்கள், வித்தியாசமான வண்ண அலங்காரங்கள் மற்றும் ஒரு தனித்துவமான அலாய் வீல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இதன் உட்புறம் முழுவதும் கருப்பு நிறத்தில் சிவப்பு நிற ஹைலைட்டுகளுடனும், ஸ்டாண்டர்ட் மாடலை விட சில கூடுதல் அம்சங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செயல்திறனில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. இதன் விலை 12.75 லட்சத்தில் தொடங்கி 13.65 லட்சம் வரை நீளக்கூடுமாம்.


Upcoming Mid-Size SUV: EV தொடங்கி ஹைப்ரிட் வரை..! புதுசா வரும் 5 மிட்-சைஸ் SUVக்கள், எல்லாமே பட்ஜெட் மாடல்கள்

5. நிஸ்ஸான் டெக்டான்

புதிய ரெனால்ட் டஸ்டரின் அதே RGMP ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டுள்ள நிசான் டெக்டான், 1.0-லிட்டர் டர்போ, 1.3-லிட்டர் டர்போ மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் சிஸ்டம் போன்ற பவர்ட்ரெய்ன் தேர்வுகள் உட்பட, அதன் பிளாட்ஃபார்மில் உள்ள பெரும்பாலான இயந்திர அமைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகவுள்ள இது, உலகளாவிய நிசான் பேட்ரோலில் இருந்து பெறப்பட்ட ஒரு தனித்துவமான வடிவமைப்பு மொழியுடன், தோற்றத்தில் தன்னை வேறுபடுத்திக் காட்டும். இது ஏற்கனவே பலமுறை முன்னோட்டமாகக் காட்டப்பட்டு, சோதனை ஓட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் விலை 11 லட்சத்தில் தொடங்கி 19 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget