ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான டாடா டிகோர் செடான் காரை புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியச் சாலைகளில் செடான் கார்களுக்கான வரவேற்பு எப்போதும் குறையாமல் உள்ளது. பல நிறுவனங்கள் புதிய செடான் மாடல்களைத் தொடர்ந்து களமிறக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான டாடா டிகோர் செடான் காரை புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகப்படுத்த உள்ளது. இக்காரின் ஆரம்ப விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் தோராயமாக ரூ. 6 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம்.
இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது பலமுறை தென்பட்டுள்ள இந்த புதிய மாடல், நடுத்தர பட்ஜெட்டில் பிரீமியம் அனுபவத்தையும் 5-ஸ்டார் பாதுகாப்பையும் விரும்பும் குடும்பங்களுக்குச் சரியான தேர்வாக அமையும். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு இது கடும் போட்டியளிக்கும்.
கவர்ச்சியான ஸ்போர்ட்டி வடிவமைப்பு
புதிய டிகோரின் முன்புறத்தில் புதிய சிக்னேச்சர் கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் ஸ்போர்ட்டியான பம்பர் ஆகியவை புதிய வடிவமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் புதிய அலாய் வீல்களும், பின்புறத்தில் கனெக்டட் எல்இடி டெயில்லைட்டுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த முரட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்பு காருக்கு ஒரு சொகுசு தோற்றத்தைக் கொடுக்கிறது.
நவீன வசதிகள் கொண்ட கேபின்
முற்றிலும் மேம்படுத்தப்பட்ட இதன் கேபினில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியுடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறவுள்ளது. டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் சீட்டுகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், புதிய வண்ணக் கலவை மற்றும் உயர்தர இன்டீரியர் பொருட்களுடன் இது சொகுசான அனுபவத்தைத் தரும்.
வலிமையான இன்ஜின் மற்றும் ரேஞ்ச்
இதில் 86 PS பவர் மற்றும் 113 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். முக்கியமாக, டூயல் சிலிண்டர் தொழில்நுட்பம் கொண்ட iCNG மாடலிலும் இது வெளிவரவுள்ளது. இதனால் பூட் ஸ்பேஸ் குறையாமல், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கி.மீ மைலேஜ் கிடைக்கும்.
பாதுகாப்பில் சமரசம் இல்லை
தற்போதைய டிகோர் குளோபல் NCAP சோதனையில் 4-ஸ்டார் பெற்றுள்ள நிலையில், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்னும் வலுவான பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 6 லட்சத்திற்குள் கிடைக்கும் மிக பாதுகாப்பான செடான் காராக இருக்கும்.
ட்ரெண்டிங் செய்திகள்























