மேலும் அறிய

Tata Tigor Xpres: அடடே..! ரூ.5.59 லட்சத்துக்கே புதிய காரை இறக்கிய டாடா - பெட்ரோல் & CNG ஆப்ஷன், வசதிகள்

Tata Tigor Xpres Fleet: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு ஏதுவாக, டைகோர் அடிப்படையிலான Xpress மாடலை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Tata Tigor Xpres Fleet: வாடகை கார் ஓட்டுனர்களுக்கு ஏதுவாக, டாடா டைகோர் அடிப்படையிலான Xpress மாடலின் தொடக்க விலை ரூ.5.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா டைகோர் அடிப்படையிலான Xpress 

இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் வாடகை கார்களுக்கான தனது போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் விதமாக, Xpress கார் மாடலை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எடிஷன்களில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மின்சார எடிஷன் ஏற்கனவே பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் போட்டித்தனமை கொண்டதாக, Xpress காரின் பெட்ரோல் எடிஷனின் தொடக்க விலை ரூ.59 லட்சமாகவும், இரட்டை சிலிண்டர் கொண்ட சிஎன்ஜி எடிஷனின் விலை ரூ.6.59 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த பிரிவுகளில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் வாடகை கார்களுக்கான செடான்களாக இரண்டு கார்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள டாடா நிறுவனத்தின் வாடகை கார்களுக்கான பிரத்யேக விற்பனை நிலையங்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

டாடா Xpress - இன்ஜின், சிஎன்ஜி விவரங்கள்

 Xpress காரின்  பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு வேரியண்ட்களிலுமே 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் தான் இடம்பெற்றுள்ளது. அவை இரண்டுமே பிரத்யேகமாக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர சேவை பயணங்களுக்காகவும், நம்பகத்தன்மை மற்றும் வாடகை கார்களுக்காக்வே நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாம். சிஎன்ஜி செக்மெண்டில் இதுவரை இல்லாத வகையில் 70 லிட்டர் ட்வின் சிலிண்டர் எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த பிரிவிலேயே மிகப்பெரிய அளவிலான எரிபொருள் டேங்கை கொண்டு இருப்பதோடு, அதிகப்படியான மைலேஜ் வழங்கும் கார் மாடலாகவும் உருவெடுத்துள்ளது.  Xpres CNG எடிஷனின் முக்கிய சிறப்பம்சம் அதன் இரட்டை சிலிண்டர் அமைப்பாகும். இது பயன்படுத்தக்கூடிய பூட் இடத்தைப் பாதுகாக்கிறது.  வழக்கமான CNG செடான்கள் பெரும்பாலும் குறைவாகவே இசவசதியை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tata Tigor Xpres: அடடே..! ரூ.5.59 லட்சத்துக்கே புதிய காரை இறக்கிய டாடா - பெட்ரோல் & CNG ஆப்ஷன், வசதிகள்

டாடா Xpress - வாடகை கார்களுக்கான இடவசதி

போதுமான இடவசதிகளை விசாலமாக கொண்டிடுப்பதால் பயணிகள் தங்களது லக்கேஜ்களை சமரசம் இன்றி எடுத்துச் செல்ல முடியும் என்பதை உறுதி செய்கிறது. இது முன்பதிவு இழப்புகளைக் குறைத்து ஒட்டுமொத்த வருவாயை மேம்படுத்துகிறது. மறுபுறம், பெட்ரோல் வேரியண்டானது 419 லிட்டர் பெட்ரோல் ஃப்ளீட் செடான் பிரிவில் மிகப்பெரிய பூட் வசதியை வழங்குகிறது. உரிமைச் செலவுகளை உறுதியாகக் கட்டுக்குள் வைத்திருக்க, டாடா மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ நிலையான உத்தரவாதத்தை வழங்குகிறது.

Tata Tigor Xpres: அடடே..! ரூ.5.59 லட்சத்துக்கே புதிய காரை இறக்கிய டாடா - பெட்ரோல் & CNG ஆப்ஷன், வசதிகள்

டாடா Xpress - வாரண்டி

எது முதலில் வருகிறதோ அதுவரை என இது ஐந்து ஆண்டுகள் அல்லது 1,80,000 கிமீ வரை நீட்டிக்கப்படலாம். பராமரிப்பு செலவுகள் ஒரு கிமீக்கு ரூ. 0.47 என மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இது வணிக பயன்பாடுகளுக்கு எக்ஸ்பிரஸை மிகவும் செலவு குறைந்த செடான்களில் ஒன்றாக மாற்றுகிறது. விரிவாக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் லைன் - அப்பை ஆதரித்து, டாடா மோட்டார்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பிரத்யேக ஃப்ளீட்-மையப்படுத்தப்பட்ட டீலர்ஷிப்களை உருவாக்கியுள்ளது. எக்ஸ்பிரஸ் பிரிவின் கீழ் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகன விருப்பங்கள் மூலம், டாடா இந்தியாவில் மிகவும் விரிவான ஃப்ளீட் செடான் லைன் - அப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tata Tigor Xpres: அடடே..! ரூ.5.59 லட்சத்துக்கே புதிய காரை இறக்கிய டாடா - பெட்ரோல் & CNG ஆப்ஷன், வசதிகள்

Frequently Asked Questions

டாடா டைகோர் Xpress மாடலின் தொடக்க விலை என்ன?

டாடா டைகோர் Xpress பெட்ரோல் மாடலின் தொடக்க விலை ரூ.5.59 லட்சம். சிஎன்ஜி மாடலின் விலை ரூ.6.59 லட்சம் ஆகும்.

டாடா டைகோர் Xpress கார்களில் என்னென்ன எஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளன?

டாடா டைகோர் Xpress கார்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு எடிஷன்களில் வருகின்றன. இரண்டுமே 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளன.

டாடா டைகோர் Xpress CNG மாடலின் சிறப்பு என்ன?

Xpress CNG மாடல் 70 லிட்டர் இரட்டை சிலிண்டர் எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது. இது அதிக மைலேஜ் தருவதோடு, பூட் இடத்தையும் பாதுகாக்கிறது.

டாடா டைகோர் Xpress கார்களுக்கான உத்தரவாதம் என்ன?

டாடா நிறுவனம் மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ வரை நிலையான உத்தரவாதத்தை வழங்குகிறது. இது ஐந்து ஆண்டுகள் அல்லது 1,80,000 கிமீ வரை நீட்டிக்கப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?

Embed widget