மேலும் அறிய

Tata Tiago 2026 Vs Tiago EV: டியாகோ Vs டியாகோ EV - டாப் 10 அப்டேட்கள் என்ன? எது எப்படி டாப்? முழு விவரங்கள்

Tata Tiago 2026 Vs Tiago EV: டாடா டியாகோ மற்றும் டியாகோ மின்சார எடிஷனுக்கு இடையே உள்ள 10 வித்தியாசங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Tata Tiago 2026 Vs Tiago EV: டாடா டியாகோ மற்றும் டியாகோ மின்சார எடிஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வரும் மே 28ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது.

டாடா டியாகோ Vs டியாகோ EV..

டாடா டியாகோவின் 2026 எடிஷன் மற்றும் டியாகோ மின்சாரா மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் ஆகியவை வரும் மே 28ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக வெளியிடப்பட்ட விளம்பர வீடியோக்கள் மூலம், கார்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் எப்படி மேம்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரங்கள் கிடைத்துள்ளன. இரண்டிலுமே கவனிக்கத்தக்க வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், இரண்டிலுமே பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மாடலிலும் வழங்கப்பட்டுள்ள மாற்றங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய டியாகோவின் உட்புற அப்டேட்கள் என்ன?

  • இன்ஜின் அடிப்படையிலான டாடா டியாகோ, தற்போது இரண்டு ஃப்ளோட்டிங் திரைகளை பெறுகிறது. அவை சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஒரு புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • புதிதாக வடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு, பளபளப்பான கருப்பு நிறத்தில் இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் பேட்களுடன் திருத்தப்பட்ட சென்டர் கன்சோல், டூயல் டோன் கருப்பு மற்றும் சாம்பல் நிற துணி இருக்கை உறைகள், புதிய கதவு பேட்கள் மற்றும் முன்புற இருக்கையில் ஒரு சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவையும் புதிய அப்டேட்களாக வழங்கப்பட்டுள்ளன
  • ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் HVAC ஸ்விட்ச்கியர் ஆகியவை மாற்றமின்றி இருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த ஏசி கட்டுப்பாடுகள் மற்றும் ஏசி வென்ட்களுடன் கூடிய புதிய ஃப்ளோட்டிங் பேனல் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய டியாகோ EV-யின் உட்புற அப்டேட்கள் என்ன?

  • புதிய 2026 டாடா டியாகோ EV, சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய டூயல் டோன் கேபின் தீம் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியை வழங்குகிறது. இதில் மறுவடிவமைக்கப்பட்ட டேஷ்போர்ட், சென்டர் கன்சோல் மற்றும் 'டாடா EV' என்ற  என பெயர் பொறிக்கப்பட்ட டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இடம்பெற்றுள்ளன
  • டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே ஆகிய இரண்டும், டேஷ்போர்டில் பொருத்தப்பட்ட மிதக்கும் பாணியிலான திரைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
  • இன்ஜின் எடிஷனைப் போலவே, மேம்படுத்தப்பட்ட டியாகோ EV-யிலும் சென்டர் கன்சோலில் பளபளப்பான கருப்பு நிறப் பூச்சும், 360-டிகிரி கேமராவும் இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் முன் இருக்கையின் பின்புறப் பாக்கெட்டுகளும் உள்ளன

இதையும் படியுங்கள்: 17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்

டியாகோ / டியாகோ EV-யின் டிசைன் அப்க்ரேட்

  • மேம்படுத்தப்பட்ட டியாகோவில் புதிய LED முகப்பு விளக்குகள் மற்றும் திருத்தப்பட்ட பம்பர் இடம்பெற்றுள்ளன. புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள், மாற்றியமைக்கப்பட்ட பின்புற பம்பர் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட கனெக்டட் டெயில் லேம்ப்கள்  ஆகியவை புதிய வடிவமைப்பு சிறப்பம்சங்களில் அடங்கும்.
  • 2026 டாடா டியாகோ EV-யில் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள், அதன் இன்ஜின் மாடலைப் போலவே உள்ளன. இருப்பினும், இதில் 'டாடா EV' பேட்ஜிங், மூடப்பட்ட க்ரில், வாகன மையத்தின் கீழ் பகுதியில் இன்டேக், பம்பரின் பக்கவாட்டில் ஏர் கர்டன்கள், ஏரோ-ஆப்டிமைஸ்டு வீல்கள் மற்றும் பின்புற ஸ்பாய்லர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டியாகோ / டியாகோ EV - பவர்ட்ரெயின் விவரங்கள்

  • புதிய டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட், தற்போதுள்ள 86hp திறன் கொண்ட 1.2-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 75.5hp திறன் கொண்ட சிஎன்ஜி பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை அப்படியே தொடர வாய்ப்புள்ளது. 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீட் ஆட்டோமேடர் உள்ளிட்ட ட்ரான்ஸ்மிஷன்களும் மாற்றமின்றி தொடரலாம்.
  • 2026 டியாகோ EV ஃபேஸ்லிஃப்ட், 19.2kWh மற்றும் 24kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை முறையே 61hbp மற்றும் 75bhp மின்சார இன்ஜின்களுடன் இணைக்கப்படும். சிறிய பேட்டரி பேக் 223 கிலோ மீட்டர் தூரமும்,  பெரிய பேட்டரி பேக் 293 கிலோ மீட்டர் தூரமும் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget