மேலும் அறிய

Harrier EV: நாட்டின் முதல் AWD EV கார்..! ரூ.2.5 லட்சம் குறைந்த விலை - எல்லாமே இருக்கு, புது ஹாரியர் எப்படி?

Harrier EV: நாட்டின் முதல் ஆல் வீல் ட்ரைவ் மின்சார எஸ்யுவி ஆன ஹாரியர் கார் மாடலின், மலிவு விலை எடிஷனை ரூ.26.49 லட்சத்தில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Harrier EV: டாடா ஹாரியர் கார் மாடலின் புதிய எடிஷனானது டாப் எண்ட் வேரியண்டை காட்டிலும் ரூ.2.5 லட்சம் மலிவு விலையில் கிடைக்கிறது.

ஹாரியர் மின்சார காரின் புதிய எடிஷன் அறிமுகம்:

டாடா ஹாரியர் மின்சார எடிஷனின் புதிய ஃபியர்லெஸ்+ QWD 75 வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்த கார் மாடல் மிகவும் அணுகக் கூடியதாக மாறியுள்ளது. இதன் விலை ரூ.26.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் டாப் எண்ட் வேரியண்டான எம்பவர்ட் QWD 75 ட்ரிம்மின் ரூ.28.99 லட்சத்தை காட்டிலும், சுமார் ரூ.2.5 லட்சம் மலிவு விலையில் புதிய வேரியண்டை பயனர்கள் வாங்கலாம். புதிய வேரியண்டின் மூலம் பயனர்கள் தற்போது ஹாரியர் மின்சார எடிஷனின் லைன் - அப்பில் தற்போது இரண்டு ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன்களை பெறுகின்றனர்.

ஹாரியர் EV - விலை விவரங்கள்

வேரியண்ட்கள் எக்ஸ் - ஷோ ரூம் விலை
அட்வென்சர் 65 ரூ.21.49 லட்சம்
அட்வென்சர் S 65 ரூ.21.99 லட்சம்
ஃபியர்லெஸ்+ 65 ரூ.23.99 லட்சம்
ஃபியர்லெஸ்+ 75 ரூ.24.99 லட்சம்
ஃபியர்லெஸ்+ QWD 75 (புது வேரியண்ட்) ரூ.26.49 லட்சம்
எம்பவர்ட் 75 ரூ.27.49 லட்சம்
எம்பவர்ட் QWD 75 ரூ.28.99 லட்சம்


Harrier EV: நாட்டின் முதல் AWD EV கார்..! ரூ.2.5 லட்சம் குறைந்த விலை - எல்லாமே இருக்கு, புது ஹாரியர் எப்படி?

ஃபியர்லெஸ்+ QWD 75 எடிஷனின் அம்சங்கள்

அம்சங்கள் அடிப்படையில் டாடா ஹாரியர் மின்சார எடிஷனின் ஃபியர்லெஸ்+ 75 வேரியண்டானது, 540 டிகிரி வியூ கேமரா, பில்ட் இன் டேஷ்கேம் உடன் கூடிய டிஜிட்டல் IRVM, 15 அம்சங்களுடன் கூடிய ஆட்டோ பார்க் அசிஸ்ட், டால்பி அட்மாஸ், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், அல்ட்ரா வைட் பேண்ட் உடன் கூடிய டிஜிட்டல் கீ, ப்ளூடூத்  லோ எனர்ஜி மற்றும் நியர் ஃபெல்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

கூடுதலாக இந்த எஸ்யுவியில், பில்ட் இன் நேவிகேஷன் உடன் கூடிய 12.3 இன்ச்  டச்ஸ்க்ரீன்  இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர்ட் பாஸ் மோட், மெமரி உடன் கூடிய விங் மிரர்ஸ் 4 டெரெயின் மோட்கள் (நார்மல், வெட், ரஃப் மற்றும் கஸ்டம்), கதவு மற்றும் செட்ரல் கன்சோலில் ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் டூயல் டோன் ஸ்மார்ட் டிஜிட்டல் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.


Harrier EV: நாட்டின் முதல் AWD EV கார்..! ரூ.2.5 லட்சம் குறைந்த விலை - எல்லாமே இருக்கு, புது ஹாரியர் எப்படி?

ஃபியர்லெஸ்+ QWD 75 பேட்டரி, சார்ஜிங் அம்சங்கள்:

டாடா ஹாரியரின் புதிய ஃபியர்லெஸ்+ QWD 75 வேரியண்டானது டூயல் மோட்டாருடன் 75KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதன் மூலம் 313hp, 504Nm ஆற்றலை உற்பத்தி செய்து, பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.3 விநாடிகளில் எட்டுகிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த பேட்டரி பேக்கானது ரியல் வீல் ட்ரைவ் மோடில் 627 கிலோ மீட்டரும், ஆல் வீல் ட்ரைவ் மோடில் 622 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. வழக்கமான 7.2KW ஏசி சார்ஜர் மூலம், 10.7 மணி நேரத்தில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் நிலையை எட்டுமாம். 120KW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 25 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகித நிலையை எட்ட முடியும் என டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் நம்பிக்கையை அதிகரிக்க, டாடா மோட்டார்ஸ் பேட்டரிக்கு வரம்பற்ற வாழ்நாள் உத்தரவாதத்தை வழங்குகிறது.

ரூ.2.5 லட்சம் சேமிக்க வாய்ப்பு: என்ன வித்தியாசம்

டாடா ஹாரியர் மின்சார காரின் எம்பவர்ட் QWD 75 வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், ஃபியர்லெஸ்+ QWD 75 வேரியண்டானது, இரட்டை மோட்டடார் ஆல் - வீல் ட்ரைவ் லைன் -அப்பில் மலிவு விலை கொண்டதாக உள்ளது. அதாவது, சுமார் ரூ.2.5 லட்சத்தை பயனர்கள் சேமிக்கலாம். இரண்டு மாடல்களுமே ஒரே மாதிரியான மெகானிக்கல் பவர்ட்ரெயின் மற்றும் பேட்டரி அம்சங்களை கொண்டிருந்தாலும், எம்பவர்ட் வேரியண்டானது கூடுதலாக ப்ரீமியம் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சொகுசான பயணத்திற்கான பெரிய டச்ஸ்க்ரீன் மற்றும் லெவல் 2 ADAS உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. குறிப்பாக,

  • எம்பவர்ட் QWD 75 வேரியண்ட்டில் சாம்சங் நியோ QLED டிஸ்பிளேவுடன்கூடிய 14.53 இன்ச்  டச்ஸ்க்ரீன் இருக்கையில், ஃபியர்லெஸ்+ QWD 75 வேரியண்டில் 12.3 இன்ச் யூனிட் மட்டுமே உள்ளது
  • எம்பவர்ட் ட்ரிம்மில் மட்டுமே ட்ரான்ஸ்பரெண்ட் பானெட் மோடில் ஆட்டோபார்க் அசிஸ்ட் மற்றும் 540 டிகிரி வியூ கேமரா வசதி உள்ளது
  • கெஸ்டர் ஆக்டிவேஷன் உடன்கூடிய பவர்ட் டெயில்கேட், பின்புற இருக்கைகளுக்கான பவர்ட் பாஸ் மோட், ஆகிய அம்சங்களும் ஃபியலெஸ் வேரியண்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபியர்லெஸ்+ QWD 75 யாருக்கான தேர்வு?

முழுமையான அம்சங்களை விட, செயல்திறன் மற்றும் ஆஃப்-ரோடிங் திறனுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு புதிய வேரியண்ட் சரியான தேர்வான இருக்கும்.  இரட்டை மோட்டார் அமைப்பு வழங்கும் ஆல்-வீல் டிரைவ் (AWD) திறன், சாலையில் பிடிப்பையும் நிலைத்தன்மையையும் அதிகரிக்கிறது. ஆஃப்-ரோட் அசிஸ்ட் மற்றும் பூஸ்ட் மோட் போன்ற அம்சங்கள், கரடுமுரடான சாலைகளிலும் நகரப் போக்குவரத்திலும் இதை எளிதாக ஓட்ட உதவுகின்றன. விலை குறைக்கப்பட்டிருந்தாலும், டாடா சிறப்பம்சங்களில் பெரிய அளவில் சமரசம் செய்யவில்லை. பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget