ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ் தரும் புதிய மின்சார காரை சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
சுசுகியின் புதிய மின்சார கார்:
இந்த நிலையில், சுசுகி நிறுவனம் விரைவில் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது. e Sky எனப்படும் இந்த மின்சார காரை சுசுகி நிறுவனம் விரைவில் ஜப்பானில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் பின்னர், உலகின் மற்ற நாடுகளுக்கு இந்த காரை அறிமுகப்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.
310 கி.மீட்டர் மைலேஜ்:
இந்த கார் மிகவும் சிறிய காராக உள்ளது. தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். இந்த காரில் 26 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 310 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
இந்த கார் 3 ஆயிரத்து 395 மி.மீட்டர் நீளமும், 1,475 மி.மீட்டர் அகலமும் மற்றும் 1625 மி.மீட்டர் உயரமும் கொண்டது. 140 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இந்த கார் 63 எச்பி குதிரை ஆற்றலும், 133 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது.
விலை எப்படி?
உலக சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படும் இந்த கார் வரும் நவம்பர் 16ம் தேதி அறிமுகமாகிறது. இந்த காரின் தொடக்க விலை இந்திய மதிப்பில் ரூபாய் 12.97 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 17.07 லட்சம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதை ஏசி சார்ஜரில் சார்ஜ் செய்வதற்கு 4.5 மணி நேரம் ஆகிறது. டிசி சார்ஜிங்கில் 25 நிமிடங்கள் ஆகிறது. இந்த காரில் எல்இடி முகப்பு விளக்குகள், டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 14 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 4.2 இன்ச் ஓட்டுநர் தகவல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 10.1 இன்ச் எச்டி டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. யுஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி, 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் வசதி உள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
பயணிகளின் பாதுகாப்பு கருதி 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா சிஸ்டம், ஓட்டுநர் தூக்க கலக்க எச்சரிக்கை, லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் டிபார்ச்சர் ப்ரெவென்ஷன், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், வெஹிகிள் ஸ்வா வார்னிங் வசதி உள்ளது.
தற்போது வரை இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து சுசுகி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இந்தியாவில் இந்த காரை சுசுகி அறிமுகப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















