மேலும் அறிய

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: அதிக மைலேஜ் தருவது எது? முழுமையான டிசைன், சிறப்பம்சங்கள் ஒப்பீடு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான மாடல்களான கிளாசிக் 350 (Classic 350) மற்றும் புல்லட் 350 (Bullet 350) ஆகிய இரண்டு பைக்குகளுக்கும் இடையே எந்த பைக் அதிக மைலேஜ் தருகிறது மற்றும் அவற்றின் கட்டமைப்பில் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பது குறித்து கீழே விரிவாகப் பார்க்கலாம்.

இன்ஜின் மற்றும் மைலேஜ் 

இரண்டு பைக்குகளிலும் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியான 349cc, சிங்கிள் சிலிண்டர், J-சீரிஸ் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 20.2 bhp பவரையும், 27 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரே இன்ஜின், ஒரே கட்டமைப்பு மற்றும் ஏறக்குறைய ஒரே எடை (சுமார் 195 கிலோ) கொண்டிருப்பதால், இரண்டின் மைலேஜும் சமமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் கிளாஸிக் 350-ன் மைலேஜ் 41.55 கி,மீ என்று ஏஆர்ஏஐ தெரிவித்துள்ள நிலையில், புல்லட்டின் மைலேஜ் 37 கி.மீ. ஆக உள்ளது.

டிசைன் மற்றும் வடிவமைப்பு வேறுபாடுகள்

  • கிளாசிக் 350: இது ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பிளிட் சீட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்லேம்ப் கவுல் மற்றும் பக்கவாட்டு பேனல்கள் சற்று பிரீமியம் தோற்றத்தைத் தருகின்றன.
  • புல்லட் 350: இது பல தசாப்தங்களாகத் தொடரும் ராயல் என்ஃபீல்டின் பாரம்பரிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதில் சிங்கிள் பீஸ் சீட்  மற்றும் சதுர வடிவிலான ரியர் ஃபெண்டர் இடம்பெற்றுள்ளது. இதன் பெட்ரோல் டேங்கில் கையால் வரையப்பட்ட பாரம்பரிய தங்க நிறப் கோடுகள் உள்ளன.

இதன் மூலம் கிளாசிக் 350 பிரீமியல் தோற்றத்தைத் தருகிறது என்பது தெரிகிறது. எளிய  தோற்றத்தை விரும்புவோர் புல்லட்டைத் தேர்வு செய்யலாம்

இரண்டு மாடல்களுமே ட்வின் டவுன்டியூப் ஸ்பைன் ஃஃப்ரேம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. பாதுகாப்பிற்காக முன்புற டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பம் இரண்டு பைக்குகளிலும் வழங்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு விலை ஒப்பீடு

புல்லட் 350- ஆரம்ப நிலை மாடல்: தோராயமாக ரூ. 1.74 லட்சம் (எக்ஸ் ஷோரூம்), டாப் மாடல் - தோராயமாக ரூ. 2.16 லட்சம்

கிளாசிக் 350 - ஆரம்ப நிலை மாடல் -ரூ. 1.93 லட்சம், டாப் மாடல் - ரூ. 2.25 லட்சம்

இதன்மூலம் கிளாசிக் 350 மாடலை விட புல்லட் 350 பைக்கின் விலை சற்று குறைவாக உள்ளது தெரிய வருகிறது. வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தங்களுக்கு ஏற்ற பைக்கைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஏன் பிளாப் ஆனது MG Astor? விற்பனை நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள்
ஏன் பிளாப் ஆனது MG Astor? விற்பனை நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள்
காரில் ADAS வேணுமா? மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 சூப்பர் பட்ஜெட் கார்கள் லிஸ்ட்
காரில் ADAS வேணுமா? மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 சூப்பர் பட்ஜெட் கார்கள் லிஸ்ட்
அறிமுகமாகியது ஹீரோவின் அப்டேட் வெர்சனான Hero Xtreme 160R 4V & Xtreme 250R
அறிமுகமாகியது ஹீரோவின் அப்டேட் வெர்சனான Hero Xtreme 160R 4V & Xtreme 250R
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget