ரெடியாகிய Renault... இந்தியாவிற்குள் இறக்கப்போகும் 3 புதிய கார்கள்! என்னென்ன?
Upcoming Renault Cars: ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள 3 புதிய கார்கள் பற்றி கீழே காணலாம்.

இந்தியாவில் கார்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தனக்கென மிகப்பெரிய வாடிக்கையாளர்களை வைத்துள்ள நிறுவனம் ரெனால்ட். ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தனக்கென புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொண்டு வரும் சூழலில், ரெனால்ட் நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.
3 புதிய கார்கள்:
இதன்படி, ரெனால்ட் நிறுவனம் அடுத்தாண்டுக்குள் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Duster. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக அறிமுகமாக உள்ளது Duster Hybrid. இந்த கார் இந்தாண்டு தீபாவளிக்கு அறிமுகமாக உள்ளது. இந்த காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் Hybrid E-Tech 160 powertrain ஆக அறிமுகமாக உள்ளது. 80 சதவீதம் ஓட்டுவதற்கே கடினமான சூழலில் எலக்ட்ரிக் மோட் அறிமுகமாக உள்ளது.
எஸ்யூவி கார்:
ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 3 வரிசை எஸ்யூவி கார் அறிமுகமாக உள்ளது. இந்த கார் அடுத்தாண்டு அறிமுகமாக உள்ளது. 1.8 லிட்டர் Hybrid E-Tech சிஸ்டம் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் என இந்த கார் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 4.6 மீட்டர் நீளத்துடன் இந்த கார் அறிமுகமாக உள்ளது. 6 அல்லது 7 இருக்கைகள் கொண்ட காராக இந்த கார் அறிமுகமாகிறது.
Bridger:
ரெனால்ட் நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள கார் சப் 4 மீட்டர் எஸ்யூவி காரான Bridger. இந்த காரும் அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி காரில் பல்வேறு வசதிகளை ரெனால்ட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் தோற்றம், வடிவமைப்பு ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின், டர்போ பெட்ரோல், ஹைப்ரிட் ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகமாக உள்ளது.
இந்திய சந்தையில் வலுவாக காலூன்றியுள்ள டாடா, மஹிந்திரா, மாருதி சுசுகி ஆகிய கார்களுக்கு போட்டியாக ரெனால்ட் நிறுவனமும் வருங்காலங்களில் பல்வேறு புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் ரெனால்ட் ட்ரைபர், ரெனால்ட் கிவிட், ரெனால்ட் கிகர் ஆகிய கார்கள் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. பட்ஜெட் விலையில் விற்பனையாகும் இந்த கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த கார்களுக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதனால், மற்ற கார்களையும் இதேபோல வெற்றிகரமான காராக குறிப்பாக டஸ்டர் போன்று வெற்றிகரமான காராக விற்பனைக்கு கொண்டு வர ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தொடர்ந்து திட்டங்களை வகுத்து வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















