மேலும் அறிய

விலை கம்மி... பிரீமியம் அம்சங்கள் அதிகம்! புதிய டஸ்டர் அட்வென்ச்சர் எடிஷன்! என்னென்ன ஸ்பெஷல்?

ரெனால்ட் டஸ்டர் அட்வென்ச்சர் எடிஷன்பனோரமிக் சன்ரூஃப், டர்போ இன்ஜின் உடன் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள

சாகசத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ரெனால்ட் புதிய டஸ்டர் அட்வென்ச்சர் எடிஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள், கூடுதல் அம்சங்கள் & கவர்ச்சிகரமான விலையுடன் வந்த இந்த ஸ்பெஷல் எடிஷன் ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). டஸ்டரில் ஏற்கனவே வந்த ஐகானிக் எடிஷனுக்குப் பிறகு வெளியான இரண்டாவது ஸ்பெஷல் மாடல் இது.

புதிய டஸ்டர் அட்வென்ச்சர் எடிஷன் மூன்று வேரியண்டுகளில் கிடைக்கிறது. 

Adventure Turbo Tce 100 MT வேரியண்டின் விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

Adventure Turbo Tce 160 MT விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

Adventure Turbo Tce 160 DCT வேரியண்டின் விலை ரூ.15.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

இந்த ஸ்பெஷல் எடிஷனின் முக்கிய ஈர்ப்பு சிறப்பு சாகச கிராபிக்ஸ் ஆகும். பின்புறத்தில் டோபோகிராஃபிக்கல் கான்டூர் கோடுகளுடன், லே பகுதிக்கு சொந்தமான புவியியல் ஆயத்தொலைவுகள் 34.27 N & 77.60 E டெக்கால் வடிவில் வழங்கப்பட்டுள்ளன. கடினமான மலைப் பகுதிகளில் டஸ்டரை சோதித்ததன் அடையாளமாக இந்த சிறப்பு வடிவமைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதே வடிவமைப்பு தீம் முன் கதவுகளில் உள்ள பிளாக்குகளிலும் காணப்படுகிறது. மேலும், அட்வென்ச்சர் எடிஷனுக்கு சிறப்பு ஃப்ளோர் மேட்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த எடிஷன் Evolution டிரிம் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு மேல் உள்ள வேரியண்டில் காணப்படும் சில பிரீமியம் அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 10.1 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல TFT டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் Android Auto & Apple CarPlay, 17 அங்குல அலாய் வீல்கள், முழு LED லைட்டிங், 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

அதுமட்டுமின்றி டாப் Techno டிரிம்மில் கிடைக்கும் பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட் & டூயல் ஜோன் ஏசி போன்ற பிரீமியம் அம்சங்களும் இந்த சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது சிறப்பு. இதன் மூலம், விலைக்கு மேலும் மதிப்பை வழங்கும் வேரியண்டாக Adventure திகழ்கிறது.

இன்ஜின் விருப்பங்களைப் பொறுத்தவரை, வழக்கமான டஸ்டரில் உள்ள மூன்று பவர்டிரெய்ன் விருப்பங்களே அட்வென்ச்சர் எடிஷனிலும் தொடர்கின்றன. 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 100 hp பவர் & 160 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும்.

1.3 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 163 hp பவர் & 280 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

குறைந்த விலையில் சிறப்பு வடிவமைப்பு, பிரீமியம் அம்சங்கள் & சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களை விரும்புவோருக்கு ரெனால்ட் டஸ்டர் அட்வென்ச்சர் எடிஷன் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். குறிப்பாக நீண்ட தூர பயணங்கள், சாகச பயணங்களை விரும்பும் எஸ்யூவி பிரியர்களை இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் பிடிக்கும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget