மேலும் அறிய

வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம்.. 140 கிமீ வரை பயணிக்கலாம்!" அசத்தல் அம்சங்களுடன் பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்திய ஆட்டோ சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெறும் 45,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன. அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு உள்ளன.

மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நடந்து வருகிறது. இது கச்சா எண்ணெய் இறக்குமதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் எரிபொருள் விலையை குறைக்கவும் மின்சார வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இதனால்தான் கடந்த சில மாதமாக  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. நல்ல ரேஞ்ச், குறைந்த விலை மற்றும் எளிதான பராமரிப்புடன் கூடிய பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆட்டோ சந்தையில் கிடைக்கின்றன. அதனால்தான் பட்ஜெட் பிரிவு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நகரப் பயணங்களிலும் இரண்டாம் நிலை நகரங்களிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது இந்திய ஆட்டோ சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெறும் 45,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன. அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு உள்ளன. பட்ஜெட் விலையில் கிடைக்கும் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஹீரோ விடா விஎக்ஸ்2

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் கிடைக்கும் பட்ஜெட் ஈவி ஸ்கூட்டர்களின் பட்டியலில் ஹீரோ விடா விஎக்ஸ்2 (Hero Vida VX2) இடம் பெற்றுள்ளது. இது மிகவும் சிக்கனமான ஒரு தேர்வாகும். இதன் விலையை குறைக்க 'பேட்டரி-அஸ்-ஏ-சர்வீஸ்' (BaaS) போன்ற வசதியை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த வசதியின் மூலம் நீங்கள் குறைந்த விலையில் ஈவி ஸ்கூட்டரை வாங்க முடியும். பேட்டரிக்கு மட்டும் நீங்கள் தனியாக சந்தா (Subscription) எடுக்க வேண்டும். இதில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி வசதி உள்ளது.

அதாவது நீங்கள் பேட்டரியை வீட்டிற்கு எடுத்துச் சென்று சார்ஜ் செய்யலாம் அல்லது வெளியே உள்ள சார்ஜிங் நிலையங்களிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ஈவி சுமார் 140 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. எனவே தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 44,990 ரூபாய் ஆகும்.

இதையும் படிங்க: கம்பீரத்தில் ராயல் என்ஃபீல்டிற்கு டஃப் கொடுக்கும் Yezdi Roadster! என்ன விலை? மைலேஜ் எப்படி?

டிவிஎஸ் ஐக்யூப்

இது தவிர டிவிஎஸ் நிறுவனத்தின் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டரின் விலை சற்றே அதிகமாகத் தோன்றினாலும் இதன் தரம், சேவை நெட்வொர்க் மற்றும் மென்மையான பயணம் காரணமாக இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் 100 முதல் 200 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் கொடுக்கும் பல மாடல்கள் உள்ளன. பேட்டரி திட்டத்துடன் சேர்த்து இதன் ஆரம்ப விலை (எக்ஸ்-ஷோரூம்) 60,000 ரூபாய் ஆகும்.

ஓலா எஸ்1 இசட்

ஓலா எஸ்1 இசட் (Ola S1 Z) உட்பட ஓலா மற்றும் பிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்த பிரிவில் பிரபலமான மாடல்களாக உள்ளன. இந்த ஈவியின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் 59,999 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 146 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் டெலிவரி மற்றும் கிிக் தொழிலாளர்களுக்கான ஓலா கிக் (Ola Gig) வெறும் 49,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. கோமாகி எக்ஸ்ஜிடி கேஎம் மற்றும் கிரீன் ஈவி விஸ்டா போன்ற மாடல்களும் 55,000 முதல் 60,000 ரூபாய் விலையில் கிடைக்கின்றன.

ஏதர் ரிஸ்டா 

நீங்கள் சற்றே பிரீமியம் அனுபவத்தை விரும்பினால் ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் ஏதர் ரிஸ்டா (Ather Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், ஸ்மார்ட் வசதிகள் மற்றும் சிறந்த செயல்திறனுக்காக அறியப்படுகின்றன. இதன் விலை (எக்ஸ்-ஷோரூம்) 76,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்கூட்டர் சிறந்த மென்பொருள், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கனெக்டட் வசதிகளுடன் வருகிறது.

பஜாஜ் சேத்தக்

பஜாஜ் ஆட்டோவின் பஜாஜ் சேத்தக் மற்றும் ஓலா ஸ்கூட்டர்களும் இந்த பிரிவில் மிகவும் பிரபலமானவை. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நல்ல டிசைன் மற்றும் நம்பகமான செயல்திறனுடன் வருகின்றன. சில என்ட்ரி லெவல் மாடல்கள் 70,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Upcoming Bike: அடுத்தடுத்து அறிமுகமாகும் Bike! இந்த வருஷத்துக்குள்ளே இத்தனை புது வரவா?
Upcoming Bike: அடுத்தடுத்து அறிமுகமாகும் Bike! இந்த வருஷத்துக்குள்ளே இத்தனை புது வரவா?
Car Price: லிஸ்டில் இணைந்த டாடா, ஹுண்டாய்..! கார்களுக்கான விலை உயர்வு அறிவிப்பு - எந்த மாடலுக்கு எவ்வளவு?
லிஸ்டில் இணைந்த டாடா, ஹுண்டாய்..! கார்களுக்கான விலை உயர்வு அறிவிப்பு - எந்த மாடலுக்கு எவ்வளவு?
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Embed widget