மேலும் அறிய

SUV Car: வேகம் தான் பிடிக்குமா? 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் - ஆக்சிலரேஷனில் அதிரடி காட்டும் எஸ்யுவிக்கள், டாப் 5 மாடல்கள்

SUV Car: வலுவான செயல்திறனுக்கு உதவும் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதி கொண்ட, மலிவு விலை எஸ்யுவி கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

SUV Car: வலுவான செயல்திறனுக்கு உதவும் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதி கொண்ட, மலிவு விலை எஸ்யுவி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

7 ஸ்பீட் ஆட்டோமேடிக் எஸ்யுவி ஆப்ஷன்கள்:

புதிய எஸ்யுவி வாங்கும் விருப்பத்தை கொண்டுள்ளீர்களா? மிருதுவான பயணம், வேகமான கியர் மாற்றங்கள், நல்ல செயல்திறன் மற்றும் அதிரடியான ஆக்சிலரேஷன் ஆகியவை உங்களது எதிர்பார்ப்புகளா? எனில் பொதுவாக டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் (DCT) என அழைக்கப்படும் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். உள்நாட்டு சந்தையில் எளிதாக அணுகக் கூடிய வகையில் ஹுண்டாய் வென்யு, கியா செல்டோஸ், டாடா நெக்ஸான், ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகன் ஆகிய கார் மாடல்கள் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. இவை செயல்திறன், வசதி, நவீன அம்சங்கள் ஆகியவற்றின் கலவையாக திகழ்கிறது.

7 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் செய்வது என்ன?

7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஏழு தனித்துவமான கியர் ரேஷியோக்களை வழங்குவதன் மூலம் வாகனத்தின் செயல்திறனையும் ஆற்றல் சேமிப்பையும் மேம்படுத்துகிறது. 5 அல்லது 6-வேக டிரான்ஸ்மிஷனைக் காட்டிலும், இன்ஜின் அதன் சிறந்த ஆற்றல் வரம்பில் அடிக்கடி நிலைத்திருக்க அனுமதிக்கிறது. மேலும், நெடுஞ்சாலைப் பயணத்தின்போது RPM-களைக் குறைப்பதன் மூலம், இது வேகமான மற்றும் மென்மையான கியர் மாற்றத்தையும், சிறந்த முடுக்கத்தையும், மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தையும் சாத்தியமாக்குவது குறிப்பிடத்தக்கது.

SUV Car: வேகம் தான் பிடிக்குமா? 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் - ஆக்சிலரேஷனில் அதிரடி காட்டும் எஸ்யுவிக்கள், டாப் 5 மாடல்கள்

டாப் 5 - 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் எஸ்யுவிக்கள்

1. டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் அதன் கிரியேட்டிவ் வேரியண்ட்டில், மோனோஸ்டேபிள் ஷிஃப்டர் மற்றும் பேடில் ஷிஃப்ட்டுடன் கூடிய 7-ஸ்பீடு வெட் கிளட்ச் DCA ஆப்ஷனை கொண்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ. 11.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. வெகுஜன சந்தையில் மிகவும் பிரபலமான இந்த கார் மாடல், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும்வேகத்தை வெறும் 11 முதல் 13 விநாடிகளில் எட்டுகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டு, லிட்டருக்கு சுமார் 17 லிட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

2. கியா செல்டோஸ்

கியா செல்டோஸ் 7DCT கியர்பாக்ஸ் அதாவது 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை,  தனது HTK (O) வேரியன்டில் கொண்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 14.19 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 1.5-லிட்டர் TGDi பெட்ரோல் இன்ஜினை கொண்டு லிட்டருக்கு சுமார் 17 கிலோ மீட்டர் மைலெஜ் வழங்குவதாக கியா அறிவித்துள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 8.9 முதல் 9.24 விநாடிகளில் எட்டுகிறது.

SUV Car: வேகம் தான் பிடிக்குமா? 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் - ஆக்சிலரேஷனில் அதிரடி காட்டும் எஸ்யுவிக்கள், டாப் 5 மாடல்கள்

3. ஹுண்டாய் வென்யு

ஹூண்டாய் வென்யு 1.0-லிட்டர் TGDi பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் 7DCT கியர்பாக்ஸை கொண்டுள்ளது. 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ள HTK (O) வேரியன்ட் விலை ரூ. 10.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 11 முதல் 12 விநாடிகளில் எட்டுகிறது. லிட்டருக்கு 18 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக ஹுண்டாய் அறிவித்துள்ளது.

4. கியா சோனெட்

இந்த பட்டியலில் கியாவின் மற்றொரு மாடலாக சோனெட் இடம்பெற்றுள்ளது. 7DCT மற்றும் 1.0-லிட்டர் TGDi பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ள, HTK (O) வேரியன்ட்டின் ஆரம்ப விலை ரூ. 8.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படும் இந்த வேரியண்டானது, 11 முதல் 12 விநாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை எட்டுமாம்.

SUV Car: வேகம் தான் பிடிக்குமா? 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் - ஆக்சிலரேஷனில் அதிரடி காட்டும் எஸ்யுவிக்கள், டாப் 5 மாடல்கள்

5. ஃபோக்ஸ்வாகன் டைகன்

இறுதியாக, ஃபோக்ஸ்வேகன் டைகன் 1.5-லிட்டர் TSI இன்ஜினுடன் 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 18.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 8.8 விநாடிகளில் எட்டும் இந்த காரானது, லிட்டருக்கு சுமார் 19 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என ஃபோக்ஸ்வாகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 142 கி.மீட்டர் மைலேஜ்.. வசீகரிக்கும் Ampere Magnus G Max இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 142 கி.மீட்டர் மைலேஜ்.. வசீகரிக்கும் Ampere Magnus G Max இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
US Iran War: 7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
7-வது நாளாக அடித்து நொறுக்கும் அமெரிக்கா; அசராமல் பதிலடி கொடுக்கும் ஈரான்; CENTCOM கூறுவது என்ன.?
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்‌ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்‌ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
Embed widget