மேலும் அறிய

Oben Rorr இ பைக் வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி ப்ரோ? லுக் மாஸ்தான்

Oben Rorrr இ பைக்கின் தரம், அதன் செயல்பாடுகள், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இ ஸ்கூட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில் கியர் பைக்குகளின் சாயலில் மின்சார பைக்குகளையும் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியாவில் விற்பனையாகி வரும் Oben Rorr இ பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

 Oben Rorr:

இந்த பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 56 ஆயிரத்து 683. இந்த பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இந்த Oben Rorr பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 187 கிலோமீட்டர் வரை செல்லலாம்.  அதிகபட்சமாக இந்த Oben Rorr பைக்கில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

பேட்டரி ஆற்றல்:

இந்த இ பைக்கின் எடை 147 கிலோ ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 7 மணி நேரம் ஆகிறது. இதன் இருக்கை உயரம் 810 மி.மீட்டர் ஆகும். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இந்த இ பைக் விற்பனைக்கு வருகிறது. 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது.

இந்த Oben Rorr இ பைக்கில் 4.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 80 சதவீத சார்ஜை 6 மணி நேரத்திலும், 100 சதவீத சார்ஜை 7 மணி நேரத்திலும் எட்டுகிறது. இந்த பேட்டரி நிரந்தரமான பேட்டரி ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

யுபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது, அலாய் சக்கரங்கள் இதிங் உள்ளது. 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது, மோனோஷாக் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 40 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. ப்ளூடூத், இணைய வசதி இதில் உள்ளது. ஜிபிஎஸ் வசதி இல்லை. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ப்ரேக், டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இ ஸ்கூட்டர்களின் விற்பனை அளவிற்கு இ பைக்குகளின் விற்பனை இன்னும் அதிகரிக்கவில்லை. ஆனாலும், வசீகரமான தோற்றம், இளைஞர்களை கவரும் நோக்கத்தில் இந்த இ பைக்குகளின் விற்பனை நடந்து வருகிறது. 

நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்ப இந்த இ பைக்குகளின் மைலேஜ் அதிகரிக்கும் வகையில் நிறுவனங்களும் தொடர்ந்து  பல வேரியண்ட்களையும், மாடல்களையும் தயாரித்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் அதிகளவில் இ ஸ்கூட்டர்களுக்கு நிகராக இ பைக்குகளும் இந்தியாவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 720 கிமீ ரேஞ்ச்... இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்..புதிய BMW 7 Series காரில் அப்படி என்ன இருக்கு? முழு அம்சங்கள்
ஒரே சார்ஜில் 720 கிமீ ரேஞ்ச்... இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்..புதிய BMW 7 Series காரில் அப்படி என்ன இருக்கு? முழு அம்சங்கள்
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்.. Ather Rizta Z இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்.. Ather Rizta Z இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget