மேலும் அறிய

Nissan Tekton vs Renault Duster: நிஸான் டெக்டான் Vs ரெனால்ட் டஸ்டர்: விலை, அம்சங்கள், இன்ஜின்- முழு ஒப்பீடு!

ரெனால்ட் டஸ்டருக்கு போட்டியா நிஸான் டெக்டான்? வடிவமைப்பு, டிசைன்- விவரம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) மற்றும் அதன் அடிப்படையிலான நிஸான் டெக்டான் (Nissan Tekton) ஆகிய இரண்டு எஸ்.யு.வி கார்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு மாடல்களுமே ஒரே CMF-B பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டாலும், வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங்கில் மாறுபடுகின்றன.

டிசைன் மற்றும் வடிவமைப்பு

  • ரெனால்ட் டஸ்டர்: இது முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. Y வடிவ எல்.இ.டி டே-டைம் ரன்னிங் லைட்டுகள், அகலமான வீல் ஆர்ச்சுகள் மற்றும் உறுதியான பம்பர்களுடன் பாரம்பரிய டஸ்டரின் முரட்டுத் தோற்றத்தை தக்கவைத்துள்ளது.
  • நிஸான் டெக்டான்: இது சற்று பிரீமியம் மற்றும் மாடர்ன் டிசைனைக் கொண்டுள்ளது. நிஸானுக்கே உரிய பிரத்யேக கிரில் வடிவமைப்பு, L-வடிவ எல்.இ.டி DRL-கள், முற்றிலும் புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
  • ஒற்றுமைகள்: இரண்டு கார்களிலும் பக்கவாட்டு கதவுகள், மேற்கூரை, ஜன்னல் கண்ணாடிகளின் அமைப்பு மற்றும் அடிப்படை பாடி பேனல்கள் ஆகியவை ஒன்றாகவே இருக்கின்றன.அலாய் வீல்களின் டிசைன் மட்டுமே மாடலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. 

உட்புற வடிவமைப்பு

டேஷ்போர்டு லே-அவுட் இரண்டிலும் ஒன்றாகவே இருக்கின்றன. 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை பகிரப்படுகின்றன. இருப்பினும், பிராண்ட் லோகோ, ஸ்டீயரிங் வீல் டிசைன், ஏசி வென்ட்கள் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி நிறங்கள் ஆகியவை இரண்டு கார்களுக்கும் தனித்தனியாக வேறுபடுத்திக் காட்டப்படும்.

என்ஜின் மற்றும் ரேஞ்ச் விவரங்கள்

  • இரண்டு மாடல்களிலும் ஒரே மாதிரியான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதில் டீசல் என்ஜின் ஆப்ஷன் கிடையாது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

 ஹைப்ரிட் ரேஞ்ச்: எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறப்பான ரேஞ்ச் வழங்குவதற்காக, 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கூடிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இரண்டு கார்களிலும் வழங்கப்படும்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

மேலும், ஆஃப் ரோடு பயன்பாட்டிற்காக இரண்டு கார்களின் டாப் வேரியண்ட்களிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டஸ்டரைப் போல 100 hp – 1 லிட்டர் மற்றும் 163 hp 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் உள்ளன. அதேபோல, 6 ஸ்பீட் மேனுவல்  கியர்பாக்ஸ் உள்ளன. அதேநேரத்தில் டெக்டானில் 160 hp 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெய்ன் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

நிஸான் டெக்டானின் எக்ஸ் ஷோ ரூம் விலை, டஸ்டரைப் போலவே  ரூ.10.49 லட்சத்தில் தொடங்குகிறது. டெக்டானின் டாப் என்ட் வேரியண்ட்டின் விலை 10 ஆயிரம் ரூபாய் குறைவாக ரூ.18.59 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Kia Hybrid: இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Embed widget