மேலும் அறிய

Next Generation Honda Activa: வருகிறது ஆக்டிவா 7G! அசத்தல் அம்சங்களுடன் ஹோண்டா களமிறக்கும் சூப்பர் வண்டி!

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஹோண்டா ஆக்டிவா 7G-ல், எல்இடி விளக்குகள் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் போன்ற வசதிகளை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் சமீபத்தில் தான் நடந்து முடிந்திருக்கிறது ஸ்பெக்ட்ரம் 5G ஏலம்.. அதே நேரத்தில் ஹோண்டாவில் 7G வரப்போகிறது. அந்த 5G-க்கும் இந்த 7G-க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனென்றால் வரப்போவது ஹோண்டா ஆக்டிவா 7G. இந்த அடுத்த தலைமுறை ஆக்டிவா 7G-ன் டீசரை ஹோண்டா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஹோண்டா ஆக்டிவா 7G-ல், எல்இடி விளக்குகள் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் போன்ற வசதிகளை எதிர்பார்க்கலாம்.

தற்போது விற்பனையில் உள்ள Activa 6G, 2020 ஜனவரியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹோண்டா ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை ஆக்டிவாவைப் புதுப்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், இந்த வருடம் அடுத்த தலைமுறை ஆக்டிவா 7G-யை அறிமுகப்படுத்த இருக்கிறது.

20 வருடங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வந்த ஹோண்டா ஆக்டிவா அறிமுகமானது முதல் இன்றுவரை இதன் விற்பனை ஏறுமுகத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறது. இதன் போட்டியாளரான டிவிஎஸ் ஜூபிடரில் ஏராளமான வசதிகள் இருக்கும் நிலையில் தற்போது ஆக்டிவாவிலும் வசதிகளை மேம்படுத்தி அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா.

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் (eSP) தொழில்நுட்பம், சைலண்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர், 12-இன்ச் வீலுடன் கூடிய முன் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் 3-ஸ்டெப் அட்ஜஸ்டபில் சஸ்பென்ஷன், சீட்டை திறக்காமல் எரிபொருளை நிரப்பி கொள்ள வசதியாக வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் DC LED ஹெட்லேம்ப் போன்ற வசதிகள் உள்ளன.

முழுமையான மெட்டல் பாடியுடன், கால் வைத்து ஓட்ட கூடுதல் இடவசதி மற்றும் ஓட்டுநரின் வசதிக்காக நீண்ட இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனுடன் அதிகரிக்கப்பட்ட வீல்பேஸ் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்சுடன் உடன் வருகிறது.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற ஆக்டிவா, ஹோண்டாவின் 6 வருட வாரண்டியுடன் விற்பனையாகிறது. இதன் 110 சிசி BS 6 எஞ்சின் 7.7 HP பவர் மற்றும் 8.84 Nm டார்க்கை வழங்குகிறது.

அறிமுகமாக இருக்கும் ஆக்டிவா 7G விற்பனையில் இருக்கும் 6G-யை விட தரத்தில் மேம்பட்டதாக இருக்கும். இதில் ஹெட்லேம்ப் முதல் டெயில் லேம்ப் இண்டிகேட்டர்கள் வரை அனைத்தும் எல்இடி தான். மேலும் இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை ஸ்மார்ட் போனுடன் இணைத்து கொள்ளும் வகையில் புளூடூத் வசதி ஆப்ஷனலாக கொடுக்கப்படலாம்.

இந்த ஹோண்டா ஆக்டிவா 7G-ன் அடுத்த தலைமுறை எஞ்சின் முன்பைவிட அதிக எரிபொருள் சிக்கனமானதாகவும் அமைதியானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலவரப்படி, ஆக்டிவா 6G-ன் Standard மாடலின் விலை ரூ.89,000/- (சென்னை ஆன்ரோட்) மற்றும் Deluxe மாடலின் விலை ரூ.91,000/- (சென்னை ஆன்ரோட்).

ஆக்டிவா 7ஜி விற்பனைக்கு வரும்போது இதைவிட சற்று கூடுதலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Free CNG Kit: தரமான தீபாவளி கிஃப்ட்.. இந்த காரை வாங்கினால் ரூ.85,999 மதிப்புள்ள பொருள் இலவசம்..மிஸ் பண்ணிடாதீங்க!
தரமான தீபாவளி கிஃப்ட்.. இந்த காரை வாங்கினால் ரூ.85,999 மதிப்புள்ள பொருள் இலவசம்..மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே சார்ஜில் 402 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகிறது Second-gen Mini Cooper Electric கார்! எப்போது தெரியுமா?
ஒரே சார்ஜில் 402 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகிறது Second-gen Mini Cooper Electric கார்! எப்போது தெரியுமா?
ஒரே சார்ஜில் 517 கி.மீட்டர் மைலேஜ்.. 4 லட்சம் ரூபாய் விலையை குறைத்த Vinfast! புதிய விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 517 கி.மீட்டர் மைலேஜ்.. 4 லட்சம் ரூபாய் விலையை குறைத்த Vinfast! புதிய விலை எவ்ளோ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
Embed widget