Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
New Gen Kia Sonet Hybrid: கியா நிறுவனத்தின் புதிய தலைமுறை சோனெட் கார் மாடல் சாலைகளில் பரிசோதனையை தொடங்கியுள்ளது.

New Gen Kia Sonet Hybrid: கியா நிறுவனத்தின் புதிய தலைமுறை சோனெட் கார் மாடலில் எதிர்பார்க்கப்படும் ஹைப்ரிட் உள்ளிட்ட அம்சங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை கியா சோனெட்:
அடுத்த தலைமுறை கியா சோனெட் கார் மாடலின் சாலை பரிசோதனை தென்கொரியவில் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவி ஆனது மிகப்பெரிய அளவிலான அப்க்ரேட்களை பெற உள்ளது. அதில் புதிய வெளிப்புற தோற்றம், புதிய ப்ளாட்ஃபார்ம் அதோடு வலுவான ஹைப்ரிட் ஆப்ஷனிற்கும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதமான தரமான அப்டேட்களால் உள்ளூர் சந்தையில் இந்த காரானது டாடா நெக்ஸான், மஹிந்த்ரா XUV 3XO, மாருதி ப்ரேஸ்ஸா மற்றும் ஹுண்டாய் வென்யு ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது.
புதிய தலைமுறை சோனெட் - டிசைன் அப்க்ரேட்கள்
சாலை சோதனையில் சிக்கிய மாடலானது மிகப்பெரிய அளவில் மூடி மறைக்கப்பட்டு இருந்ததால், மிக முக்கிய அம்சங்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன. இருப்பினும், முன்புற புலி மூக்கு க்ரில்லானது மேலும் அகலமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுக்றது. கூடுதல் வளைவான மெஷ் பேட்டர் வழங்கப்பட்டு இருக்கலாம். திருத்தப்பட்ட முகப்பு விளக்கு தொகுப்பானது பம்பரின் எட்ஜ் வரையில் செங்குத்தாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கியாவின் EV9 மற்றும் சைரோஸ் மாடல்களில் பின்பற்றப்பட்டுள்ள, நவீன ஆப்போசைட்ஸ் யுனைடட் டிசைன் மொழி பின்பற்றப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் ஜியோமேட்ரிக் ஸ்போக் பேட்டர்ன்களுடன் கூடிய புதிய டூயல் டோன் டைமண்ட் கட் அலாய்வீல்கள், புதிய மொழியிலான வீல் ஆர்க் க்ளாடிங், ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தோற்றமானது கம்பீரமான மற்றும் பாக்ஸியர் தோற்றத்தை கொண்டிருக்கக் கூடும். சர்வதேச சந்தையில் உள்ள EV9 மற்றும் செல்டோஸ் கார் மாடல்களின் தாக்கத்தை கொண்டு புதிய செல்டோஸின் டிசைன் இருக்கக் கூடுமாம். பின்புறத்திற்கு முழு அகலத்திற்கான கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப் பாரானது, செங்குத்தான ட்ராப்-டவும் லைட்டிங் எலிமெண்ட்களை இருமுனையிலும் கொண்டிருக்கலாம்.
புதிய சோனெட் - ப்ளாட்ஃபார்ம் & ஹார்ட்வேர் அப்க்ரேட்ஸ்
புதிய தலைமுறை சோனெட்டானது மேம்படுத்தப்பட்ட K1 ஆர்கிடெக்ட்சரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இதே கட்டமைப்பில் தான் ஹுண்டாயின் வென்யு மற்றும் கியா சைரோஸ் ஆகிய மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அடித்தளமானது வலுவான கட்டமைப்பை உறுதி செய்வதற்காக மிக தீவிர வலுவான ஸ்டீல் பயன்படுத்தப்பட உள்ளது. தரமான கட்டமைப்பானது அநாவசியமான சத்தம், வைப்ரேஷன் மற்றும் கடினத்தன்மை ஆகியவை குறைக்கப்படுகின்றன.
புதிய சோனெட் - வசதிகள் & அம்சங்கள்
இரண்டாம் தலைமுறை கியா சோனெட் அம்சங்கள் மற்றும் வசதிகளில் குறிப்பிடத்தக்க அப்க்ரேட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 5 இன்ச் சென்ட்ரல் ஏசி ஸ்க்ரீன் மற்றும் 12.3 இன்ச் ட்ரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றை உள்ளடக்கிய 30 இன்ச் கனெக்டட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, போஸ் 7-ஸ்பீக்கர் ப்ரீமியம் ஆடியோ மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பேட் ஆகியவை இடம்பெறும். வசதியான பயணத்திற்காக முன்பக்க வெண்டிலேடட் இருக்கைகள், 4-வழி மின்சார ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட், பின்புறக் கதவு சூரிய மறைப்புத் திரைகள், மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பட்டையுடன் கூடிய தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் 70% ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்ட கியா கனெக்ட் ஆகியவை தக்கவைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள மாடல் லெவல் 1 ADAS தொழில்நுட்பத்துடன் வருகிறது, ஆனால் இரண்டாம் தலைமுறை மாடலில் முழுமையான லெவல் 2 ADAS தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. இது ஸ்டாப் & கோ அம்சத்துடன் கூடிய அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோனமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) போன்ற அம்சங்களைச் சேர்க்கும்.
புதிய சோனெட் - ஹைப்ரிட் ஆப்ஷன்கள்:
அடுத்த தலைமுறை கியா சோனெட், தற்போதுள்ள 1.2 லிட்டர் நேட்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரப்பட உள்ளது. இது மேனுவல், iMT, DCT மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, கியா நிறுவனம் அடுத்த தலைமுறை சோனெட் எஸ்யுவியின் வலுவான ஹைப்ரிட் மாடலையும் உருவாக்கி வருகிறது.

புதிய சோனெட் - எதிர்பார்க்கப்படும் விலை
அடுத்த தலைமுறை கியா சோனெட் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம் ஹைப்ரிட் எடிஷன் 2028ம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம். அப்போது இதன் விலை 8 லட்சம் முதல் 17 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















