மேலும் அறிய

New Dzire 2024: கம்மி விலை, அட்டகாசமான டிசைன், 25 கிமீ மைலேஜ் - அறிமுகமானது மாருதி சுசூகியின் புதிய டிசைர் கார் மாடல்

New Maruti Suzuki Dzire 2024: மாருதி சுசூகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டிசைர் 2024 கார் மாடலின் தொடக்க விலை ரூ.6.7 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

New Maruti Suzuki Dzire 2024: மாருதி சுசூகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டிசைர் 2024 கார் மாடல் 4 வேரியண்ட்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி டிசைர் கார் மாடல்:

புதிய டிசைர் கார் மாடல் LXi, VXi, ZXi மற்றும் ZXi+ ஆகிய 4 வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  டாப்-எண்ட் ஆட்டோமேடிக் எடிஷன் ரூ.10.14 லட்சத்தில் கிடைக்கிறது. புதிய டிசைர் சிஎன்ஜி விருப்பத்துடன் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 8.74 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் விருப்பங்கள்:

புதிய டிசைர் 5வது தலைமுறை ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. 1.2லி மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் உடன் வெளியிடப்பட்டது. புதிய டிசைர் எடிஷனில் ஆட்டோமேடிக் ட்ரிம்மின் செயல்திறன் எண்ணிக்கை லிட்டருக்கு 25.71கிமீ என்ற மைலேஜை வழங்குகிறது. அதே சமயம் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ட்ரிம் ஆனது லிட்டருக்கு 24.79கிமீ மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு விவரங்கள்:

பரிமாணங்களைப் பொறுத்தவரை, புதிய டிசைர் 3995 மிமீ நீளமும் 2450 மிமீ அகலமும் கொண்ட 4 மீட்டருக்கும் குறைவாகவே உள்ள செடான் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 163 மிமீ அன்லேடன் மற்றும் பூட் ஸ்பேஸ் 382 லிட்டராக அதிகரித்துள்ளது. முக்கியமாக, புதிய டிசைர் ஸ்டேண்டர்டாக அதிக பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டுள்ளது மற்றும் நிச்சயமாக 5-நட்சத்திர GNCAP கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெறும் முதல் மாருதி சுசூகி இது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தொழில்நுட்ப அம்சங்கள்:

9-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி வியூ கேமரா, சன்ரூஃப், காலநிலை கட்டுப்பாடு, கனெக்டட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்கள், ஆர்காமிஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன. அரினா டீலர்ஷிப்களில் விற்கப்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய டிசையர் கிரிஸ்டல் எல்இடி ஹெட்லேம்ப்கள், டிரினிட்டி எல்இடி பின்புற டெயில்-லேம்ப்கள், 15-இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் ஸ்பாய்லர் என பலவற்றை உள்ளடக்கிய புதிய வடிவமைப்பு மொழியுடன் வருகிறது. 

சந்தையில் போட்டியாளர்கள்:

டிசைர் கார் மாடல் ஆனது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர் போன்ற புதிய மாடல்கள் மட்டுமின்றி,  விரைவில் வரவிருக்கும் ஹோண்டா அமேஸ் போன்ற மற்ற காம்பாக்ட் செடான்களுடனும் போட்டியிடுகிறது. விற்பனையைப் பொறுத்தவரை, புதிய டிசையர் நீண்ட காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமான செடானாக இருந்து வருகிறது மற்றும் விற்பனையிலும் அசத்தி வருகிறது. புதிய மேம்படுத்தலின் மூலம், மாருதி சுசூகி புதிய தொழில்நுட்பம், புதிய அதிக எரிபொருள் திறன் கொண்ட இன்ஜின், கூடுதல் அம்சங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget