மேலும் அறிய

Kawasaki Eliminator 400: போடு வெடிய!.. அசத்தலான அப்டேட்கள் உடன் கவாசகி எலிமினேட்டர் 400 அறிமுகம்

புதிய கவாசகி எலிமினேட்டர் 400 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த கவாசகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலிமினேட்டர் 400 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கவாசகியின் புதிய மோட்டார்சைக்கிள்:

கவாசகி நிறுவனத்தின் எலிமினேட்டர்  மோட்டார்சைக்கிள் கடந்த வாரம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் புதிய 400சிசி குரூஸர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதியதாக என்ன உள்ளது?

தற்போது சந்தையில் இருக்கும் கவாசகி மோட்டார்சைக்கிளை காட்டிலும், புதிய குரூஸரின்  வெளிப்புற வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் ஆகியவை முற்றிலும் வேறுபட்டதாகும். சில கோணங்களில் இது பெரிய Vulcan S ஐ நினைவூட்டுகிறது, மற்ற அம்சங்களில் இது Rebel 350 உடன் ஒப்பிடும்போது ஒரே மாதிரியான வடிவமைப்புக் கோடுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், வட்ட LED முகப்பு விளக்கு, ஒரு பருமனான எரிபொருள் தொட்டி மற்றும் ஒரு பகுதியளவு வெளிப்படும் சட்டகம் மற்றும் பிளவு இருக்கை அமைப்பு, மோட்டார் சைக்கிளுக்கு நேர்த்தியான மற்றும் பருமனான வடிவமைப்பைக் கொடுக்கிறது.

இன்ஜின் விவரங்கள்:

புதிய எலிமினேட்டர் 400 மாடலில் நிஞ்சா 400 ஸ்போர்ட்பைக்-இல் உள்ளதை போன்ற இன்ஜினை வழங்கப்படுகிறது. அதன்படி புதிய கவாசகி எலிமினேட்டர் 400 மாடலில் 399சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 48 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய டிரெலிஸ் ஃபிரேம், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

விலை விவரங்கள்:

புதிய எலிமினேட்டர் 400 ஸ்டாண்டர்டு மற்றும் SE என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 71 ஆயிரம் என்றும் SE வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 33 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது கவாசகி எலிமினேட்டர் 400 மாடல் ஜப்பான் நாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.  

இதர சிறப்பம்சங்கள்:

இதன் SE வேரியண்டில் முன்புறம், பின்புற கேமராக்கள், இதர அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. புதிய எலிமினேட்டர் 400 மாடலில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது. இது நிஞ்சா 400 மாடலில் உள்ளதை விட 5 லிட்டர் வரை குறைவு ஆகும்.

இந்த மோட்டார்சைக்கிளின் சீட் உயரம் அனைத்து வித அளவுகளில் உள்ள ரைடர்களுக்கும் சவுகரியத்தை வழங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.  இதன் சைக்கிள் பாகங்கள் அனைத்தும் பிளாக் நிறம் கொண்டிருக்கும் நிலையில், முழுமையான எல்.ஈ.டி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஹோண்டா ரிபெல் 500 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதன் டாப் எண்ட் SE வேரியண்டில் முன்புறம் மற்றும் பின்புற கேமரா சென்சார்கள்வழங்கப்பட்டுள்ளன. இவை டேஷ் கேமரா போன்று செயல்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm டிஸ்க், பின்புறம் 240mm டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.  

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget