மேலும் அறிய

Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?

மழைக் காலங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, கார்களில் உள்ள சில முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் குறித்து விரிவாகக் காண்போம்.

பருவமழைக் காலம் விரைவில் தொடங்க உள்ளது. மழைக் காலத்தில் கார்களைப் பாதுகாப்பாக ஓட்டுவது சவாலான காரியமாகும். ஈரமான சாலைகள் மற்றும் மந்தமான வானிலை காரணமாக விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, கார்களில் உள்ள சில முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் குறித்து விரிவாகக் காண்போம்.

முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்

ஏபிஎஸ் மற்றும் இபிடி (ABS and EBD): 

மழைக்காலத்தில் வழுக்கும் சாலைகளில் திடீரென பிரேக் பிடிக்கும் போது டயர்கள் சறுக்குவதைத் தடுப்பது ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம். இதனுடன் இணைந்து செயல்படும் எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான அளவில் பிரேக்கிங் ஆற்றலைப் பகிர்ந்து காரைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC): 

ஈரமான சாலைகளில் கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்குவதைத் தவிர்க்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இது பிரேக் மற்றும் இன்ஜின் ஆற்றலைத் தானாகவே கட்டுப்படுத்தி வாகனத்தை நிலைநிறுத்துகிறது.

ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் (Traction Control): 

அதிக தண்ணீர் அல்லது சேறான சாலைகளில் டயர்கள் ஒரே இடத்தில் சுழல்வதைத் தடுத்து, சாலைக்கும் டயருக்கும் இடையிலான பிடிமானத்தை இந்த அம்சம் உறுதி செய்கிறது.

டிஃபாகர் (Defogger): 

மழையின்போது வெளிப்புறக் குளிரால் காரின் கண்ணாடிகளில் பனிமூட்டம் படியும். முன்புற மற்றும் பின்புற டிஃபாகர்களை ஆன் செய்வதன் மூலம் கண்ணாடியில் படியும் பனியை அகற்றி தெளிவான பார்வையைப் பெற முடியும்.

ஃபாக் லேம்ப்கள் (Fog Lamps): 

பலத்த மழை மற்றும் இருட்டான நேரங்களில் வழக்கமான முகப்பு விளக்குகளைவிட ஃபாக் லேம்ப்கள் சாலையைத் தெளிவாகக் காணவும், எதிரே வரும் வாகனங்களுக்கு உங்கள் காரை எளிதாக அடையாளம் காட்டவும் உதவுகின்றன.

ரெயின் சென்சிங் வைப்பர்கள் (Rain Sensing Wipers): 

மழையின் தீவிரத்திற்கு ஏற்ப வைப்பர்களின் வேகத்தைத் தானாகவே மாற்றியமைக்கும் இந்த வசதி, ஓட்டுநரின் கவனச் சிதறலைத் தடுக்கிறது.

டயர் மற்றும் பிரேக் தரம்: 

மழைக்காலத்திற்கு முன் டயர்களின் தேய்மானத்தை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். தேய்ந்த டயர்கள் எளிதில் வழுக்கக் கூடும். அதேபோல, பிரேக் பேடுகளின் தரத்தையும் முன்கூட்டியே பரிசோதிப்பது பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதமளிக்கும்.

இந்த அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமும், வாகனத்தை மிதமான வேகத்தில் இயக்குவதன் மூலமும் மழைக்காலப் பயணங்களை முற்றிலும் பாதுகாப்பானதாக மாற்றலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget