MG Hector Tomahawk: 517KM ரேஞ்ச் மட்டுமில்லை வீட்டிற்கே கரண்ட் கொடுக்கும் ஹெக்டர் டாம்ஹாவ்க் EV - டாப் 5 அம்சங்கள்
MG Hector Tomahawk EV: எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் டாம்ஹாவ்க் மாடலின் மின்சார எடிஷனில் மட்டுமே கிடைக்கக் கூடிய தனித்துவமான 5 அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

MG Hector Tomahawk EV: எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் டாம்ஹாவ்க் மாடலின் மின்சார எடிஷன் உள்ளூர் சந்தையில், ரூ.19.49 முதல் ரூ.23.49 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையிலான விலை வரம்பில் கிடைக்கிறது.
எம்ஜி ஹெக்டர் டாம்ஹாவ்க் EV:
இந்திய ஆட்டொமொபைல் சந்தையில் 5 மற்றும் 7 சீட்டரில் கிடைக்கும் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் டாம்ஹாவ்க் மாடலின் மின்சார எடிஷனானது, ரூ.19.49 முதல் ரூ.23.49 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 69.2KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 517 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மற்ற கார்களிலிருந்து வேறுபடும் வகையில் ஹெக்டர் டாம்ஹாவ்கில் கிடைக்கும் 5 முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹெக்டர் டாம்ஹாவ்க் EV - 5 டக்கரான அம்சங்கள்
1. டச்ஸ்க்ரீன்
ஹெக்டர் டாம்ஹாவ்க் மிகப்பெரிய 15.6 இன்ச் டச்ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதுடன், ADAS, முகப்பு விளக்கு மற்றும் பல அடிப்படைச் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அதே சமயம், இதில் பிஷிகல் பட்டன்கள் என்பது இல்லை.
2. கெஸ்டர் கட்டுப்பாடுகள்
எம்ஜி ஹெக்டர் டாம்ஹாவ்க் அதன் 15.6 இன்ச் டச்ஸ்க்ரீனை உடன் வரும் கெஸ்டர் கட்டுப்பாடுகளில், ஏசியின் வேகம், வெப்பநிலை, ஒலியளவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம் அல்லது காரை ஸ்லீப் மோடுக்குக்கூட அனுப்பலாம். இந்தச் செயல்பாடுகளைப் பயன்படுத்த இரண்டு விரல்களைப் பக்கவாட்டிலோ அல்லது மேலேயோ ஸ்வைப் செய்ய வேண்டும். அதே சமயம் ஒலியளவைக் கட்டுப்படுத்த மூன்று விரல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சைகைகளைப் பயன்படுத்த, நீங்கள் திரையைச் சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது, அதை நேரடியாகத் தொட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
3. வாகனத்திலிருந்து வீட்டிற்கு
எம்ஜி ஹெக்டர் டாம்ஹாவ்க் மாடலானது, மின்வெட்டு ஏற்படும்போது உங்கள் வீட்டிற்கோ மற்ற சாதனங்களுக்கோ மின்சாரம் வழங்கவும் அல்லது ஒரு மேடையை ஒளிரச் செய்யவும் கூடப் பயன்படும். மேலும், வி2எல் (V2L) வசதி இருப்பதால், நீங்கள் மற்ற சாதனங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியும்.
4. ட்ரான்ஸ்பெரன் வியூ
360 டிகிரி காட்சி கேமராவுடன், வாகனத்தின் அடிப்பகுதியைப் பற்றித் தெரியப்படுத்தும் ஒரு ட்ரான்ஸ்பெரன்ட் வியூ வசதியும் உள்ளது. மோசமான சாலைகளில் செல்லும்போது, அடியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க இது பயனுள்ளதாக இருக்கும்.
5. ரைடிங் மோட்கள்
இந்த மின்சார வாகனத்தில் நேப், கேம்ப், எனர்ஜைஸ், ப்ரோ பெட், வேலட் மற்றும் க்வைட் கேபின் மோட்கள் உள்ளன. இதில், உங்கள் செல்லப்பிராணிக்காக 'விரைவில் திரும்பு' என்ற செய்தியும் இதமான வெப்பநிலையும் இருக்கும். நீங்கள் உறங்கும்போது அலாரம் செயல்பாட்டுடன் விளக்குகள் மங்கலாக மாறும். முகாம் உபகரணங்களுக்கு மின்சாரம் வழங்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்:
புதிய கார் மதிப்பீட்டு சோதனைக்கு ஹெக்டர் டாம்ஹாவ்க் இதுவரை உட்படுத்தப்படவில்லை. இருப்பினும் இதில் 6 ஏர்பேக்குகள், பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், EBD உடன் கூடிய ஆண்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய ஆல் வீல் டிஸ்க் ப்ரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி அதிக தெளிவுதிறன் கொண்ட கேமரா, குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்























