மேலும் அறிய

Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?

Mercedes Car Discontinued: மெர்சிடஸ் எனப்படும் சொகுசு கார் நிறுவனம் ஒரே அடியாக 4 மாடல்களின் விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்தியுள்ளது.

Mercedes Car Discontinued: மெர்சிடஸ் சொகுசு கார் நிறுவனம் இனி உள்ளூர் சந்தையில் டாப்-ஸ்பெக் வேரியண்ட்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாம்.

4 கார் மாடல்களின் விற்பனை நிறுத்தம்

மெர்சிடஸ் நிறுவனம் A க்ளாஸ் லிமோசின், EQA மற்றும் EQB ஆகிய கார் மாடல்களின் விவரங்களை, இந்திய கார் சந்தைக்கான போர்ட்ஃபோலியோவில்இருந்து நீக்கியுள்ளது. தனது மின்சார கார் மாடலான CLA-வின் அறிமுகத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் உயர்ரக கார் மாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். கூடுதலாக தனது மின்சார எஸ்யுவி கார் மாடலான EQE காரையும் உள்ளூர் சந்தைக்கான பட்டியலிலிருந்து மெர்சிடஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.

சரிந்த விற்பனை

தொடக்க நிலை கார் மாடல்களின் விற்பனை 23 சதவிகிதம் வரை சரிந்துள்ளதாக கடந்த 2025ம் ஆண்டு மெர்சிடஸ் அறிவித்துள்ளது. அந்த பிரிவில் போட்டியிட்டு முன்னேறுவதற்கு பதிலாக, வருவாய் அழுத்தத்திற்கு மத்தியில் அங்கு நிலவும் கடுமையான விலை போட்டியிலிருந்து விலகி நிற்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர் பேசுகையில், “எண்ட்ரி லெவல் சொகுசு கார் பிரிவில் குறைந்த விலையில் கார்களை வழங்கி எங்களால் போட்டியாளர்களை ஈடுகட்ட முடியுமா?  வாய்ப்பில்லாமல் போகலாம். ஆனால், எங்களது வலிமை எங்கு உள்ளது அந்த பிரிவில் எங்களது கவனத்தை செலுத்த விரும்புகிறோம். எண்ணிக்கையை காட்டிலும் மதிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவோம்” என பேசியுள்ளார்.

Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?

எகிறிய மெர்சிடஸின் எண்ட்ரி லெவல் கார் விலை

இந்திய கார் சந்தையில் மெர்சிடஸின் போர்ட்ஃபோலியோவில் ரூ.44.46 லட்சம் மற்றும் ரூ.45.92 லட்சம் என்ற விலையில், A க்ளாஸ் லிமோசின் ப்ராண்டின் மலிவு காராக இருந்தது. ஆனால், அந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், ரூ.51.80 லட்சம் தொடங்கி ரூ.55 லட்சம் வரையிலான (எக்ஸ்-ஷோரூம்) விலைப்பட்டியலை கொண்டு, GLA மாடலானது ப்ராண்டின் மலிவு விலை கார் மாடலாக உருவெடுத்துள்ளது. அதேநேரம், ஒரே ஒரு வேரியண்டில் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள CLA காரானது, ப்ராண்டின் எண்ட்ரி லெவல் மின்சார காராக நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் விலை 55 லட்சத்தில் தொடங்கி 59 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்ட கார்களின் விலை

ஏ-க்ளாஸ் லிமோசின் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் மலிவான மாடலாக இருந்தது. 2023ம் ஆண்டு முதல்முறையாக ஃபேஸ்லிஃப்டைப் பெற்று, 5 ஆண்டுகள் விற்பனையில் இருந்தது. EQB மாடலானது ப்ராண்டின் முதல் மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட மின்சார வாகனம் ஆகும். 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2024ம் ஆண்டு அப்க்ரேட்களை பெற்றது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் இருந்த இந்த காரின் கடைசி விலை வரம்பு ரூ. 70.9 லட்சம் முதல் ரூ. 77.5 லட்சம் வரை இருந்தது. EQE எஸ்யூவி, GLE-க்கு இணையான மின்சார வாகனமாக ரூ . 1.39 கோடி விலையில் செப்டம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ. 66 லட்சம் ஆரம்ப விலையுடன், EQA ஆனது GLA-க்கு இணையான மின்சார வாகனமாகவும், மெர்சிடிஸின் மிகவும் மலிவான மின்சார வாகனமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?

மெர்சிடஸ் பென்ஸின் புதிய மின்சார கார்..

புதிய மின்சார கார் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மேற்குறிப்பிடப்பட்ட 4 மாடல்களின் கையிருப்பும் இந்திய சந்தையில் முழுமையாக விற்று தீர்ந்துள்ளன. நேரடியான புதிய போர்ன் எலெக்ட்ரிக் கார்களை தேடுபவர்கள், CLA மாடலை பரிசீலிக்கலாம். இந்த காரானது ப்ராண்ட் சார்பில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் புத்திசாலித்தனமான மெர்சிடஸ் பென்ஸ் மாடலாகும். சொகுசு போர்ன் எலெக்ட்ரிக் மின்சார வாகனத்தில் புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கியுள்ள இந்த காரானது, வரும் ஏப்ரல் 24ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது” என பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
கார்கள் விலையை லட்சக்கணக்கில் உயர்த்திய Mahindra.. எந்தெந்த காருக்கு எவ்வளவு?
கார்கள் விலையை லட்சக்கணக்கில் உயர்த்திய Mahindra.. எந்தெந்த காருக்கு எவ்வளவு?
பாரத்பென்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக புதிய பேருந்துகள் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?
பாரத்பென்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக புதிய பேருந்துகள் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!

Embed widget