மேலும் அறிய

Maruti Suzuki: புதிய எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது மாருதி சுசுகி..

மாருதி சுசுகி நிறுவனம் தனது எஸ் பிரெஸ்ஸோ எக்ஸ்ட்ரா எனும் லிமிடெட் எடிஷன் கார் மாடலை, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் ஏற்கனவே S-CNG பொருத்தப்பட்ட 12 மாடல்  வாகனங்களை,  மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தி, பத்து லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்றுள்ளது. S-CNG பொருத்தப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அண்மையில் பலேனோ மற்றும் XL6 வகை கார்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. பல்வேறு மலிவு விலை கார்களையும் அந்நிறுவனம் விற்று வருவதால், கடந்த அக்டோபர் மாத விற்பனையில் தேசிய அளவிலும் மருதி சுசுகி நிறுவனம் முதலிடம் பிடித்தது. இதனிடையே, Alto K10, WagonR மற்றும் Celerio ஆகிய கார் மாடல்களின் போட்டிக்கு மத்தியில், எஸ் பிரெஸ்ஸோ லிமிடெட் எடிஷன் கார் மாடலை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய மாடல் கார் அறிமுகம்:

புதிய மாடலுக்கு "எக்ஸ்ட்ரா" எனும் கூடுதல் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. புதிய  எஸ் பிரெஸ்ஸோ எக்ஸ்ட்ரா கார் தொடர்பான அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள மாருதி சுசுகி நிறுவனம், இந்த காரின் விலை ரூ 4.25 லட்சம் முதல் ரூ 6.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. 

இன்ஜின் விவரம்:

புதிய பதிப்பு வாகனத்தின் உபகரணங்கள் மற்றும் எஞ்சின் விவரக்குறிப்புகளில் எந்த மாற்றமும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட K10C பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

புதிய காரின் உட்புறம் ஆல் பிளாக் இண்டீரியர் தீம் செய்யப்பட்டு, புதிய இருக்கை கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டோர் பேட், ஏசி வெண்ட், செண்டர் கன்சோல் மற்றும் புதிய கால் மிதி உள்ளிட்டவைகளில் காண்டிராஸ்ட் ரெட் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. வெளிப்புறம் புதிய எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலில் முன்புற ஸ்கிட் பிலேட், டோர் கிலாடிங், முன்புறம் அப்பர் கிரில், வீல் ஆர்ச் கிலாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. புதிய கார் வழக்கமான எஸ் பிரெஸ்ஸோ மாடல் கிடைக்கும் அனைத்து நிறங்களிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
Kia Seltos: இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
Top Range Cars: டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்
டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget