மேலும் அறிய

Maruti Suzuki: வருகிறது புதிய மாருதி சுசுகி.. 7 இருக்கைகள் உடன் கூடுதல் அம்சங்கள்.. அப்டேட்ஸ் இதோ

மாருதி சுசுகி நிறுவனம் 7 இருக்கைகளை கொண்ட இரண்டு புதிய வேரியண்ட் கார்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் 7 இருக்கைகளை கொண்ட இரண்டு புதிய வேரியண்ட் கார்களை  அடுத்தடுத்து அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, கிராண்ட் விட்டாரா மற்றும் ரீபேட் செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகியின் புதிய கார்:

அண்மையில் வெளியான தகவலின்படி, நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, இந்த தசாப்தத்தின் மத்தியில் மூன்று வரிசை கிராண்ட் விட்டாரா கார் மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. அவ்வாறு வரும்போது இது முதன்மையான ICE SUV ஆக இருக்கும். மேலும் இது Grand Vitara XL என அழைக்கப்படலாம். 7 இருக்கைஅக்ள் மட்டுமின்றி மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட கிராண்ட் விட்டாரா 6 இருக்கைகள் கொண்ட வேரியண்டிலும் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இரு வேரியண்ட்களும் குளோபல் சி  பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

வெளியீடு எப்போது?

 இந்த பிரீமியம் எம்பிவி மாடல் டொயோட்டா மாருதி சுசுகி நிறுவனத்திற்கு வழங்கும் முதல் பேட்ஜ் இன்ஜினியரிங் செய்யப்பட்ட மாடலாக இருக்கும். இத்துடன் ADAS சார்ந்த டிரைவர் அசிஸ்டன்ஸ் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய முதல் மாருதி சுசுகி மாடலாகவும் இருக்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது முன்புற டிரைவ் வசதி கொண்ட எம்பிவி மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹைகிராஸ் போன்றே இந்த மாடலும் 7 மற்றும் 8 சீட்டர் வெர்ஷன்களில் கிடைக்கலாம். இந்த மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட NA பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் TNGA ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 21 கிலோமீட்டர்களுக்கும் அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

யாருக்கு போட்டி:

புதிய விட்டார கார்களில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் TNGA பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம். புதிய எஸ்யுவி தற்போதைய விட்டாரா மாடலை விட தோற்றத்தில் மாறுபடலாம். இதன் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 25 கிலோமீட்டர்களுக்கும்,  அதிக மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் மஹிந்திரா XUV700, ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. 

சிறப்பம்சங்கள்:

ஒன்பது அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா அமைப்பு, தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணக்கத்தன்மை போன்ற அம்சங்கள் அனைத்தும் இதில் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதனிடையே,  பெரிய கிராண்ட் விட்டாரா வெளியீட்டு முன் மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கிராஸ்-பேட்ஜ் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Embed widget