மேலும் அறிய

Maruti Suzuki e Vitara: 4 வேரியண்ட்களில் இ-விட்டாரா.. முழு விலை பட்டியல் வெளியீடு, கர்வ் & க்ரேட்டாவை விட கம்மி

Maruti Suzuki e Vitara Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பேட்டரியுடன் கூடிய இ-விட்டாரா மின்சார கார் மாடலின் விலை விவரங்களை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Maruti Suzuki e Vitara Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதியின் மின்சார காரான இ-விட்டாராவின் தொடக்க விலை, கர்வ் மற்றும் க்ரேட்டா போன்ற போட்டியாளர்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது.

மாருதி சுசூகி இ-விட்டாரா விலை விவரங்கள் வெளியீடு

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீண்டகால எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் மின்சார கார் மாடலான இ-விட்டாராவை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியுடன் இந்த காரின் தொடக்க விலை, 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பேட்டரியுடன் சேர்த்து இ-விட்டாரா கார் மாடலின் விலை என்ன, எத்தனை வேரியண்ட்களில் அந்த கார் விற்பனை செய்யப்படும் என்பது தொடர்பான விவரங்களை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த காரின் தொடக்க விலையானது 15 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இ-விட்டாரா - முழு விலைப்பட்டியல்

இ- விட்டாரா கார் மாடலானது மொத்தம் 4 வேரியண்ட்களி விற்பனை செய்யப்படுகிறது. அதில் டெல்டா, ஜீடா மற்றும் ஆல்ஃபா ஆகிய க்ரேட்களின் விலையானது முறையே, ரூ.15.99 லட்சம், ரூ.17.49 லட்சம், ரூ.19.79 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் க்ரேடாக டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் ஆல்பா எடிஷனின் விலையானது ரூ.20.01 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியில், இ-விட்டாராவின் விலை வரம்பானது ரூ.10.99 லட்சத்தில் தொடங்கி ரூ.14.29 லட்சமாக நீள்கிறது.


Maruti Suzuki e Vitara: 4 வேரியண்ட்களில் இ-விட்டாரா.. முழு விலை பட்டியல் வெளியீடு, கர்வ் & க்ரேட்டாவை விட கம்மி

பேட்டரியுடன் இ-விட்டாரா காரின் விலை

இ-விட்டாரா க்ரேட் விலை (எக்ஸ்-ஷோரூம்)
டெல்டா 15.99 லட்சம்
ஜீடா 17.49 லட்சம்
ஆல்பா 19.79 லட்சம்
ஆல்பா டூயல் டோன் 20.01 லட்சம்

வாடகை பேட்டரி ஆப்ஷனில் இ-விட்டாரா காரின் விலை

க்ரேட் வாகனத்தின் விலை (எக்ஸ்-ஷோரூம்) பேட்டரியின் விலை
டெல்டா ரூ.10.99 லட்சம் ரூ.3.99 லட்சம்
ஜீடா ரூ.11.99 லட்சம் ரூ.4.39 லட்சம்
ஆல்பா ரூ.14.29 லட்சம் ரூ.4.39 லட்சம்
ஆல்பா டூயல் டோன் ரூ.14.51 லட்சம் ரூ.4.39 லட்சம்

ஒரு கிலோ மீட்டருக்கான செலவு என்ன?

பேட்டரியை வாடகை முறையில் தேர்வு செய்பவர்கள் டெல்டா க்ரேடில் கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாயும், ஜீடா மற்றும் ஆல்பா வேரியண்ட்களுக்கு கிலோ மீட்டருக்கு 4.39 ரூபாயும் செலவிட வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை தேர்வு செய்பவருக்கு இன்ஸ்டாலேஷன் உடன் கூடிய ஹோம் சார்ஜர் காம்ப்லிமெண்ட்ரியாக வழங்கப்படுகிறது. கூடுதலாக மார்ச் 31ம் தேதி வரை பேட்டரியுடன் கூடிய இ-விட்டாரா காரை வாங்குபவர்களுக்கும், இன்ஸ்டாலேஷன் உடன் கூடிய ஹோம் சார்ஜர் காம்ப்லிமெண்ட்ரியாக வழங்கப்படும் என மாருதி சுசூகி அறிவித்துள்ளது.


Maruti Suzuki e Vitara: 4 வேரியண்ட்களில் இ-விட்டாரா.. முழு விலை பட்டியல் வெளியீடு, கர்வ் & க்ரேட்டாவை விட கம்மி

இ-விட்டாரா - பேட்டரி விவரங்கள்

இ-விட்டாராவின் டெல்டா க்ரேடானது 49KWh பேட்டரியுடன் நிலையான  மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டாரை கொண்டு, 142hp மற்றும் 193Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.4KW ஏசி சார்ஜர் மூலம் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் ஏற 6.5 மணி நேரங்களும், டிசி சார்ஜரில் 45 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜீடா மற்றும் டெல்டா க்ரேட்களானது 61KWh பேட்டரியுடன் நிலையான  மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டாரை கொண்டு, 172hp மற்றும் 193Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.4KW ஏசி சார்ஜர் மூலம் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் ஏற 9 மணி நேரங்களும், டிசி சார்ஜரில் 45 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.




Maruti Suzuki e Vitara: 4 வேரியண்ட்களில் இ-விட்டாரா.. முழு விலை பட்டியல் வெளியீடு, கர்வ் & க்ரேட்டாவை விட கம்மி

இ-விட்டாரா - போட்டியாளர்களின் விலை வரம்பு

உள்நாட்டு சந்தையில் இ-விட்டாரா கார் மாடலானது க்ரேட்டா மின்சார எடிஷன், டாடா கர்வ் மின்சார எடிஷன், மஹிந்த்ரா BE6, வின்ஃபாஸ்ட்VF6 & VF7, MG விண்ட்சர் மற்றும் MG ZS EV ஆகிய கார் மாடல்களுடன் மோதுகிறது.

கார் மாடல் விலை வரம்பு (எக்ஸ் - ஷோரூம்)
மாருதி இ-விட்டாரா ரூ.15.99 - ரூ.20.01 லட்சம்
ஹுண்டாய் க்ரேட்டா EV ரூ.18.02 - ரூ.24.70 லட்சம்
டாடா கர்வ் EV ரூ.17.49 - ரூ.22.24 லட்சம்
மஹிந்த்ரா BE6 ரூ.18.90 - ரூ.27.65 லட்சம்
வின்ஃபாஸ்ட் VF6 ரூ.17.29 - ரூ.19.19 லட்சம்
வின்ஃபாஸ்ட் VF7 ரூ.21.89 - ரூ.26.79 லட்சம்
MG விண்ட்சர்   ரூ.14 - ரூ.18.50 லட்சம்
MG ZS EV ரூ.17.99 - ரூ.20.50 லட்சம்

 

Frequently Asked Questions

மாருதி இ-விட்டாராவின் தொடக்க விலை என்ன?

மாருதி இ-விட்டாராவின் தொடக்க விலை 15 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இ-விட்டாரா கார் எத்தனை வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது?

இ-விட்டாரா கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது: டெல்டா, ஜீடா, ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா டூயல் டோன்.

பேட்டரியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியில் இ-விட்டாராவின் விலை வரம்பு என்ன?

பேட்டரியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியில், இ-விட்டாராவின் விலை வரம்பு 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 14 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.

இ-விட்டாராவின் டெல்டா க்ரேட் என்ன ரேஞ்ச் வழங்கும்?

இ-விட்டாராவின் டெல்டா க்ரேட் 49KWh பேட்டரியுடன் 440 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget