மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
இதுவரை சிஎன்ஜி வாகனங்களில் கியர் மாற்றுவது சிரமமாக இருந்த நிலையில், தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி இந்த செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி, நடுத்தர வர்க்க குடும்பங்களை ஈர்க்கும் வகையில் தனது பிரபலமான ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பலேனோ ஆகிய மூன்று கார்களின் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் வெர்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை சிஎன்ஜி வாகனங்களில் கியர் மாற்றுவது சிரமமாக இருந்த நிலையில், தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி இந்த செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேரியண்ட்கள் மற்றும் விலை விவரங்கள்
வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப பல்வேறு வேரியண்ட்களில் இந்த கார்கள் களமிறங்கியுள்ளன.
-
ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஏஎம்டி: இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ₹7.92 லட்சம். இந்த கார் VXi, VXi(O) மற்றும் ZXi ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.
-
டிசையர் சிஎன்ஜி ஏஎம்டி: பிரபலமான இந்த செடான் காரின் ஆரம்ப விலை ₹8.53 லட்சம். இது VXi மற்றும் ZXi ட்ரிம்களில் வருகிறது. இதன் டாப் மாடலான ZXi-ன் விலை ₹9.53 லட்சம் ஆகும்.
-
பலேனோ சிஎன்ஜி ஏஎம்டி: பிரீமியம் ஹேட்ச்பேக் காரான இதன் டெல்டா வேரியண்ட் ₹8.32 லட்சத்திற்கும், பிரீமியம் சீட்டா வேரியண்ட் ₹9.32 லட்சத்திற்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
இன்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள்
பழைய மேனுவல் சிஎன்ஜி மாடல்களை விட இந்த புதிய ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார்கள் சிறந்த மைலேஜை வழங்குவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் பெட்ரோல் விலைக்கு மத்தியில் இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும்.
-
டிசையர் சிஎன்ஜி ஏஎம்டி - 36.47 கி.மீ/ கிலோ
-
ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஏஎம்டி - 35.34 கி.மீ/ கிலோ
-
பலேனோ சிஎன்ஜி ஏஎம்டி - 34.47 கி.மீ/ கிலோ
வடிவமைப்பு மற்றும் பூட் ஸ்பேஸ் செட்டப்
சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் வசதி கிடைத்தாலும், பூட் ஸ்பேஸில் (டிக்கி அளவு) வாடிக்கையாளர்கள் சற்று சமரசம் செய்துகொள்ள வேண்டும். டாடா மோட்டார்ஸ் வழங்குவதைப் போல இரட்டை சிலிண்டர் (Twin-cylinder) தொழில்நுட்பத்தை மாருதி பயன்படுத்தவில்லை. ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பலேனோ ஆகிய மூன்று கார்களிலுமே சிங்கிள் சிலிண்டர் செட்டப் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
காரின் டிக்கியிலேயே 55 லிட்டர் சிஎன்ஜி டேங்க் மற்றும் அதற்கு அருகிலேயே ஸ்பேர் வீல் (ஸ்டெப்னி) வைக்கப்பட்டுள்ளதால், கனமான லக்கேஜ்கள் அல்லது பெரிய சூட்கேஸ்கள் வைப்பதற்கான இடம் மிகவும் குறைவாகவே உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















