மேலும் அறிய

Alto K10 : ‘ஒரு லிட்டருக்கு இவ்வளவு கிலோ மீட்டரா?’ நடுத்த மக்களின் நம்பிக்கை பெற்ற ஆல்டோ K10..!

'பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவத் தொடங்கியிருக்கும் நிலையில் ஆல்டோ கார் எரிபொருள் சிக்கனத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது'

கார் வாங்குவது என்பது இந்தியாவில் பல குடும்பங்களின் கனவு. குழந்தை பருவத்தில் இருந்தே அந்த கனவிற்கான விதை விதைக்கப்படுகிறது. திருவிழாவிற்கு சென்றாலோ, கடை வீதிக்கு சென்றாலோ பல ரக மாடல்களில் பொம்மை கார்களை வாங்கி தங்களது கனவுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் குழந்தைளுக்கு, வீட்டில் உண்மையான கார் வந்து நிற்கும் நாள் என்பது அவர்களை பொறுத்தவரை ஒரு பொன் நாள்

வசதியில்லாதவர்களும் கார் வாங்கும் வாய்ப்பு

கார் என்பது ஆடம்பரத்தில் இருந்து இன்றி அடிப்படையாக மாறிவிட்ட நிலையில், நடுத்தர குடும்பத்தினரும் கார் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், கார் வாங்கும் செலவு தங்களை கைகளை கடித்துவிடக் கூடாது என்பதிலும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் நிலையில், அவர்களுக்கான பட்ஜெட் ரக கார்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து மிடில் கிளாஸ் குடும்பங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆசையை நிறைவேற்றும் ஆல்டோ K10  - விலை எவ்வளவு ?

 இந்நிலையில், நடுத்தர குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றும் பட்ஜெட் ரக காராக அன்று முதல் இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் நிற்கிறது மாருதி சுசுகியின் ஆல்டோ K10

பாதுகாப்பு வசதிகள், உற்பத்தி செலவு உள்ளிட்டவை காரணமாக சந்தையில் பட்ஜெட் விலை கார்கள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், 5 லட்சத்திற்குள் கிடைக்கும் கார் மாடல்களில் ஆல்டோ K10 ரக கார் முக்கியமான இடைத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. குறிப்பாக, இந்த காரின் தொடக்க எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 3.70 லட்சத்தில் இருந்து தொடங்கி, 5.45 லட்ச ரூபாய் வரை செல்கிறது.  இதனால் இந்தியாவின் மலிவான அதே நேரத்தில் தரமான கார்களின் பட்டியலில் தொடர்ந்து ஆலோட் ரக கார்கள் முன்னணி வகிக்கின்றன.

பாராமரிப்பதும் எளிது

998cc பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார், சிட்டியில் ஓட்டுவதற்கும் சிறந்த தேர்வாக இருக்கிறது. அதோடு, அதனை மெயிண்டெய்ன் செய்யும் செலவும், வாகனத்தை ஓட்டுவதும் மிக எளிது என்பதாலும் மறுவிற்பனை செய்தாலும் அதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் சூழலிலும் ஆல்டோ ரக கார்களை வாங்க தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

என்ஜினின் செயல்திறன் எப்படி ?

இந்த ஆலோட் காரில் 998ச்சி, 1.0 லிட்டர் K Series Dual Jet Dual VVT பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 68 ஹார்ஸ் பவர் மற்றும் 89 என்.எம் டார்கை உற்பத்தி செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐந்து கியர் மானுவல் வெர்ஷனும் AMT என்ற ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு டிரான்ஸ்மிஸ்ஷன்களிலும் ஆல்டோ கிடைப்பதால் இப்போது பலரும் இதனை விரும்பி வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

மைலேஜ் எப்படி ?

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவத் தொடங்கியிருக்கும் நிலையில் ஆல்டோ காரை எரிபொருள் சிக்கனத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கியர் மேனுவல் வண்டி ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் வரையும், ஆட்டோமேட்டிக் எனப்படும் AMT கார் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் வரையும் CNG யில் 33.40 கிலோ மீட்டர் வரையும் தருவது இந்த காரின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் இல்லை

அதே நேரத்தில், குறைந்த விலையில் கார் கொடுக்கப்பட்டாலும் மாருதி சுசுகி ஆல்டோவை பொறுத்தவரை பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, 6 ஏர் பேக்குகள், ஏபிஸ் + ஈபிடி, இ.எஸ்.பி எனப்படும் (Electronic Stability Programme), 3 பாயிண்ட் சீட் பெல்ட் என பாதுகாப்பிற்கும் ஆல்டோ ரக கார்களில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆல்டோ கார்களின் விற்பனையும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கார் ஓட்டத் தொடங்குபவர்களின் தொடக்க தேர்வாக எப்போதும் ஆல்டோ ரக காரே இருந்து வந்த நிலையில், தொடர்ந்து அந்த இடத்தை ஆல்டோ K10 தக்கவைத்திருக்கிறது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget