மேலும் அறிய

மாருதி செலிரியோ கார் வாங்க மாதச் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழுமையான விவரம்

கார் வாங்கும்போது நிபுணர்கள் 20/4/10 என்ற விதியைப் பரிந்துரைக்கின்றனர். அதாவது, காரின் ஆன்-ரோடு விலையில் குறைந்தது 20% முன்பணம் செலுத்த வேண்டும்.

சொந்தமாக ஒரு கார் வாங்கி குடும்பத்துடன் பயணிக்க வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த தேர்வாக மாருதி சுசுகி செலிரியோ (Maruti Celerio) உள்ளது. இதன் சிறப்பான வடிவமைப்பு மற்றும் லிட்டருக்கு 25 - 26 கி.மீ வரையிலான சிறந்த மைலேஜ் காரணமாக இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விலை விவரங்கள்

மாருதி செலிரியோவின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.75 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் LXi மாடலின் ஆன் ரோடு விலை தோராயமாக ரூ.5.10 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் மற்றும் சிஎன்ஜி  வசதி கொண்ட டாப் மாடலின் ஆன்-ரோடு விலை ரூ.7.55 லட்சமாகவும் உள்ளது.

கார் வாங்குவதற்கான 20/4/10 விதி

கார் வாங்கும்போது நிபுணர்கள் 20/4/10 என்ற விதியைப் பரிந்துரைக்கின்றனர். அதாவது, காரின் ஆன்-ரோடு விலையில் குறைந்தது 20% முன்பணம் செலுத்த வேண்டும், கடன் காலத்தை 4 அல்லது 5 ஆண்டுகளாக வைத்துக்கொள்ள வேண்டும், மற்றும் மாதத்தவணை உங்களின் கைமேல் கிடைக்கும் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

பேஸ் மாடல் (Base Model) கணக்கீடு


ரூ.5.10 லட்சம் மதிப்புள்ள பேஸ் LXi மாடலுக்கு, 20% முன்பணமாக ரூ.1.02 லட்சம் செலுத்தினால், மீதமுள்ள ரூ.4.08 லட்சத்திற்கு வங்கி மூலம் கடன் பெற வேண்டும். 9.5% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால், மாத இஎம்ஐ ரூ.8,560 வரும். எனவே, மாதச் சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை பெறுபவர்கள் எந்தச் சிரமமுமின்றி இந்த மாடலை வாங்கலாம்.

டாப் மாடல் (Top Model) கணக்கீடு


ZXi+ AMT அல்லது சிஎன்ஜி வேரியண்டின் ஆன்-ரோடு விலை ரூ.7.54 லட்சம். இதற்கு 20% முன்பணமாக ரூ.1.50 லட்சம் செலுத்தினால், ரூ.6.03 லட்சம் கடனாகப் பெற வேண்டும். இதற்கு 5 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி விகிதத்தில் மாத இஎம்ஐ ரூ.12,660 வரும். இந்தத் தவணையைச் செலுத்த உங்களின் மாதச் சம்பளம் ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை இருக்க வேண்டும்.

பராமரிப்புச் செலவுகள்


மாதம் 800 முதல் 1000 கி.மீ பயணம் செய்தால், பெட்ரோல் செலவு ரூ.3,000 - ரூ.4,000 வரை ஆகும். ஆண்டு இன்சூரன்ஸ் மற்றும் சர்வீஸ் செலவு மாதம் ரூ.1,000 என கணக்கிட்டால், இஎம்ஐ (ரூ.8,560) தொகையுடன் சேர்த்து மாதம் தோராயமாக ரூ.12,500 முதல் ரூ.13,500 வரை செலவாகும். எனவே, உங்களின் சம்பளம், சேமிப்பு மற்றும் மாதாந்திர செலவுகளைக் கணக்கிட்டு சரியான மாடலைத் தேர்வு செய்வது அவசியம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெஸ்ட் சாய்ஸ்...NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சியரா EV
குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெஸ்ட் சாய்ஸ்...NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சியரா EV
Mini Cooper EV: நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Mens Day 2026: ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Embed widget