மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் சிஎன்ஜி காரை நாளை அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல, சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடும் மிகப்பெரிய அளவில் உள்ளது.
Mahindra XUV 3XO சிஎன்ஜி:
இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் நாளை Mahindra XUV 3XO காரின் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகமாகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நாளை அறிமுகமாக உள்ள இந்த மஹிந்திராவின் Mahindra XUV 3XO சிஎன்ஜி வேரியண்ட் காரில் 1.2 லிட்டர் எம்ஸ்டாலியன் TCMPFi டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது 110 எச்பி குதிரை ஆற்றல் 200 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாக அறிமுகமாகியுள்ளது. இதில் 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்களில் அறிமுகமாகிறது. சிஎன்ஜி சிலிண்டர் பக்கவாட்டில் பாதுகாப்பாக மெட்டல் ரிடைய்னிங்கால் தயாரிக்கப்பட்டுள்ளது.
வசதிகள்:
இந்த காரில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வசதி உள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரெி வசதி உள்ளது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வசதி கொண்டது. எஞ்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. எலக்ட்ரிக் சிங்கிள் பேன் சன்ரூஃப் மேற்கூரை வசதி உள்ளது. வென்டிலேட்டட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது.
எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்புவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 16 இன்ச் டூயல் டோன் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ரியர் ஸ்பாய்லர் வசதி உள்ளது. இந்த புதிய மஹிந்திரா XUV 3XO சிஎன்ஜி 3990 மி.மீட்டர் நீளமும், 1821 மி.மீட்டர் அகலமும் கொண்டது. 2600 மி.மீட்டர் வீல் பேஸ் வசதி கொண்டது. இந்தை காரின் உயரம் 1647 மி.மீட்டர் ஆகும். 346 லிட்டர் டிக்கி வசதி கொண்டது.
விலை எப்படி?
இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட் தற்போது ரூபாய் 7.79 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. சிஎன்ஜி வேரியண்டும் அதற்கு நிகராகவே விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அறிமுகமானால் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்க்கிறது.
முதல் சிஎன்ஜி:
மஹிந்திரா நிறுவனத்தின் முதல் சிஎன்ஜி இந்த கார் ஆகும். இதுவரை சிஎன்ஜி தயாரிப்பில் டாடா, மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் தங்களது கார்களை ஏற்கனவே அறிமுகப்படுத்திய நிலையில், மஹிந்திரா முதன்முறையாக தனது சிஎன்ஜி காரை நாளை அறிமுகப்படுத்துகிறது. எஸ்யூவி காராக இந்த காரை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது தனி சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















