மேலும் அறிய

Diwali Car Offer: தீபாவளிக்கு கார் வாங்க திட்டமா? அதிரடியான தள்ளுபடியில் கிடைக்கும் உங்களுக்கான ஆப்ஷன்கள் இதோ..!

Diwali Car Offer: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகளை பெற்றுள்ள கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Diwali Car Offer: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகளை பெற்றுள்ள கார்களின் விவரங்களை இந்த  தொகுப்பில் அறியலாம்.

தீபாவளி கார் ஆஃபர்:

தீபாவளி நெருங்கி வருவதால், வாகன உற்பத்தியாளர்கள் புதிய மாடல்கள் மற்றும் சிறப்பு பண்டிகை ஆஃபர்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே, வாகனம் வாங்குவது போன்ற குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும், நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இதுவே சிறந்த நேரம் ஆகும். வாகனங்களை வாங்குவதற்கு இந்தியாவில் தீபாவளி ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதப்படுகிறது. அதன்படி,  பல நபர்கள் தங்களுக்கு தேவையான வாகனத்தை வாங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாடிக்கையாளர்கள் பண்டிகைக் காலத்தின் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் விலை தள்ளுபடிகளை பயன்படுத்தி பலன் பெறலாம். உங்கள் குடும்பத்திற்காக புதிய காரை வாங்க அல்லது பழைய காரை மாற்ற விரும்பினால், இந்த தீபாவளிக்கு சிறந்த தள்ளுபடிகளை பெற்றுள்ள சிறந்த கார்களை உங்களுக்காக கீழே பட்டியலிட்டுள்ளோம்.

கார்களுக்கான சிறந்த தீபாவளி சலுகைகள்

டாடா ஹாரியர் - டாடா ஹாரியர் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் ஜோடியாக 170 ஹெச்பியை உற்பத்தி செய்யும் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த அசத்தலான டாடா எஸ்யூவி ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த காருக்கு பல்வேறு தீபாவளி சலுகைகளை டாடா அறிவித்துள்ளது. அதன்படி,  டாடா ஹாரியரை புதிய தொடக்க விலையான ரூ. 14.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்து ரூ.1,60,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி பிரெஸ்ஸா - மாருதி சுசூகி பிரெஸ்ஸா 1,462 சிசி பெட்ரோல் இன்ஜினுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. 101.64 பிஎச்பியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்வதற்கு தேவையான அம்சங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த காருக்கு பல்வேறு தீபாவளி சலுகைகளை மாருதி அறிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, மாருதி பிரேஸ்ஸாவை ரூ.42,000 வரையிலான சலுகைகளுடன் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளலாம்.

ஹூண்டாய் வெர்னா - ஹூண்டாய் வெர்னா 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது. இந்த அட்டகாசமான ஹூண்டாய் செடான் காரானது பிரீமியம் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காருக்கு பல்வேறு தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, ஹூண்டாய் வெர்னாவை ரூ.45,000 வரை சலுகைகளுடன் வழங்குகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் - மஹிந்திரா ஸ்கார்பியோ என் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N இன் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகைகளை வழங்கியுள்ளது. அறிக்கைகளின்படி, மஹிந்திரா இந்த காரை ரூ.50,000 வரை ரொக்க தள்ளுபடியுடன் வழங்குகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
Suzuki Scooters: சுசுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை எவ்ளோ? ஓர் அலசல்
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget