மேலும் அறிய

Automatic Sedans: பட்ஜெட்டில் ஆட்டோமேடிக் செடான் வாங்க ஆசைய..! இருக்கவே இருக்கே 5 லெஜண்டரி மாடல்கள்

Budget Cars Automatic Sedans: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், ஆட்டோமேடிக் செடான் கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Budget Cars Automatic Sedans: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், ஆட்டோமேடிக் செடான் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் ஆட்டோமேடிக் செடான் கார்கள்

கடும் போக்குவரத்து நெரிசல் நிலவக் கூடிய நகரப்பகுதிகளில் ஓட்டுவதற்கு எளிதாக இருப்பதால், ஆட்டோமேட்டிக் செடான் கார்கள் இந்தியாவில் ஒரு பிரபலமான தேர்வாக  விளங்குகின்றன. இந்நிலையில் தற்போதைய சூழலில் ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டிலேயே வசதியான, செயல்திறன் மிக்க மற்றும் நவீன அம்சங்களின் கலவையாக பல கார் மாடல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக முன்னணி ப்ராண்ட்கள் சார்பில் நீண்டகாலமாக வெற்றிகரமாக விற்பனை செய்து தரப்படும் பல மாடல்கள், தற்போது காலத்திற்கேற்ப ஆட்டோமேடிக் எடிஷன்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் மாருதி சுசூகி டிசையர், ஹோண்டா அமேஸ்,ஹுண்டாய் ஆரா, டாடா டைகோர் மற்றும் ஹுண்டாய் வெர்னா ஆகியவை அடங்கும். இவை அன்றாடப் பயன்பாட்டிற்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் நடைமுறைக்கு ஏற்ற தேர்வுகளாக திகழ்கின்றன.

லெஜண்டரி ஆட்டோமேடிக் செடான்கள்

1. மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி டிசையரின் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ. 7.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. AMT மாடலில் உள்ள 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 80.46 hp பவரையும் மற்றும் 111.7 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின் சிக்ஸ் ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் AMT பயன்முறையில் லிட்டருக்கு 25.71கிமீ மைலேஜை வழங்கும் என கூறப்படுகிறது.

Automatic Sedans: பட்ஜெட்டில் ஆட்டோமேடிக் செடான் வாங்க ஆசைய..! இருக்கவே இருக்கே 5 லெஜண்டரி மாடல்கள்

2. ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸின் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களின் ஆரம்ப விலை ரூ. 8.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை 1.2-லிட்டர், வாட்டர்-கூல்ட் பெட்ரோல் இன்ஜினை கொண்டு, 88.50 hp பவரையும் மற்றும் 110 Nm உச்சபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.  ஹோண்டாவின் இந்த செடான் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது. லிட்டருக்கு 19.46 கி.மீ. மைலேஜ் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Automatic Sedans: பட்ஜெட்டில் ஆட்டோமேடிக் செடான் வாங்க ஆசைய..! இருக்கவே இருக்கே 5 லெஜண்டரி மாடல்கள்

3. ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா (AMT) செடான் காரின் ஆரம்ப விலை ரூ. 7.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதில் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஸ்மார்ட் ஆட்டோ AMT ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. இந்த யூனிட் அதிகபட்சமாக 81 hp பவரையும், 113.8 Nm உச்சபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. நிஜ உலக பயன்பாட்டில் லிட்டருக்கு 14 முதல் 15 கிலோ மீட்டர் மைலேஜ் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றன.

4. டாடா டைகோர்

டாடா டைகோர் (AMT) காரின் ஆரம்ப விலை ரூ. 6.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதில் 1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செடான் அதிகபட்சமாக 84.82 hp சக்தியையும், 113 Nm உச்சபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த மாடல் 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. நிஜ உலக பயன்பாட்டில் லிட்டருக்கு 14 முதல் 17 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

Automatic Sedans: பட்ஜெட்டில் ஆட்டோமேடிக் செடான் வாங்க ஆசைய..! இருக்கவே இருக்கே 5 லெஜண்டரி மாடல்கள்

5. ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா (iVT) மாடலின் ஆரம்ப விலை ரூ. 14.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த மாடல் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. டர்போ பெட்ரோல் ஆப்ஷன் அதிகபட்சமாக 157.57 hp பவரையும், 253 Nm உச்சபட்ச டார்க்கையும் வழங்குகிறது. நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் iVT கியர்பாக்ஸுடனும், டர்போ பெட்ரோல் இன்ஜின் 7 ஸ்பீட் DCT கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 16 முதல் 19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒருமுறை டேங்க் ஃபுல் பண்ணா 1200 கி.மீ! அதிசய மைலேஜ்... அதிரடி லுக்! விரைவில் மிரட்ட வரும் 3 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்
ஒருமுறை டேங்க் ஃபுல் பண்ணா 1200 கி.மீ! அதிசய மைலேஜ்... அதிரடி லுக்! விரைவில் மிரட்ட வரும் 3 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்
ஒரு லிட்டருக்கு 56 கி.மீ., செல்லும்.... TVS என்டார்க் 125 விலை என்ன? மைலேஜ், அம்சங்கள், வேரியன்ட்கள் எப்படி உள்ளன? - ஓர் அலசல்
ஒரு லிட்டருக்கு 56 கி.மீ., செல்லும்.... TVS என்டார்க் 125 விலை என்ன? மைலேஜ், அம்சங்கள், வேரியன்ட்கள் எப்படி உள்ளன? - ஓர் அலசல்
Zuno Road Safety Report: ஆண்களை விட பெண்களே பெஸ்ட், சேஃப்டி ஓட்டுநர்கள்: உறுதிசெய்த புள்ளிவிவரங்கள்
Zuno Road Safety Report: ஆண்களை விட பெண்களே பெஸ்ட், சேஃப்டி ஓட்டுநர்கள்: உறுதிசெய்த புள்ளிவிவரங்கள்
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget