மேலும் அறிய

சிட்டியில் சிட்டாய் பறக்க.. Lectrix LXS 3.0 இ ஸ்கூட்டர் வாங்கலாமா? ரேட், மைலேஜ் இதான் மக்களே!

Lectrix LXS 3.0 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. 

Lectrix LXS 3.0:

ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக Lectrix நிறுவனம் உள்ளது. இவர்களின் Lectrix LXS 3.0 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

விலையும், மைலேஜும் எப்படி?

இந்த Lectrix LXS 3.0 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 93 ஆயிரத்து 560 ஆகும். இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லலாம். இதில் அதிகபட்சமாக மணிக்கு 54 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த இ ஸ்கூட்டரின் எடை 134 கிலோ கொண்டது. 

இது மொத்தம் 5 வண்ணங்களில் உள்ளது. பச்சை, கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. இதில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எகோ மற்றும் பவர் மோட் உள்ளது. இது இந்த வண்டியிலே நிரந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும். லித்தியம் அயன் பேட்டரி இதுவாகும்.

வசதிகள்:

இதை சார்ஜ் செய்வதற்கு 3.5 மணி நேரம் ஆகும். போர்டபிள் சார்ஜர் வகையைச் சேர்ந்தது ஆகும். சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி கொண்டது. ட்ரம் ப்ரேக் முன்பக்கமும், பின்பக்கமும் உளளது. இதன் சக்கரம் ஸ்டீலால் ஆனது. முன்பக்கமும், பின்பக்கமும் சக்கரங்கள் 10 இன்ச் கொண்டது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்சனும், பின்பக்கம் டூயல் காயல் ஸ்ப்ரிங் சஸ்பென்சன் வசதியும் கொண்டது.- 810 மில்லி மீட்டர் உயரம் கொண்டது. இதில் 155 கிலோ எடை வரை கொண்டு செல்லலாம். 145 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி கொண்டது. டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி கொண்டது. ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி இதில் கிடையாது.

யுஎஸ்பி சார்ஜிங் வசதி கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன் வசதியும் உள்ளது. பேட்டரி எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதை காணும் வசதி கொண்டது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் இதில் உள்ளது. நெருக்கடியான நகர்ப்புற போக்குவரத்திற்கு இந்த வாகனம் உகந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இந்த இ ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget