மேலும் அறிய

KTM Duke 2023: ஹெட்லைட்டில் மாற்றம்.. விற்பனைக்கு வந்த கேடிஎம் டியூக் 2023 பைக்.. விலை விவரங்கள் உள்ளே..!

கேடிஎம் 200 டியூக் மாடலின் 2023 வெர்ஷன் மோட்டார் சைக்கிள், சிறு சிறு மாற்றங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேடிஎம் 200 டியூக்  மாடலின் 2023 வெர்ஷன் மோட்டார் சைக்கிள், சிறு சிறு மாற்றங்களுடன்  இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பைக் அறிமுகம்:

இந்திய சந்தையில் பல்வேறு முறை  டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்ட 2023 கேடிஎம் 200 டியூக் மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  250 டியூக் மற்றும் 390 டியூக் மாடல்களில் உள்ளதை போன்றே 200 டியூக் மாடலிலும் எல்.ஈ.டி முகப்பு விளக்கு வழங்கப்பட்டு உள்ளது. புதிய வாகனத்தின்  ஸ்டைலிங் பிரபலமான KTM 1290 சூப்பர் டியூக் R இன் ஸ்டைலிங்கை போன்று உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம்,  200சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட அனைத்து கேடிஎம் மோட்டார்சைக்கிள்களிலும் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்ஜின் விவரம்:

புதிய மாடலில் 199.5சிசி லிக்விட் கூல்டு, DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 2.467 ஹெச்பி பவர், 19.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கிளட்ச் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

வாகனத்தின் சிறப்பம்சங்கள்:

இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய மாடலும் மெல்லிய மற்றும் கூர்மையான பாடிவொர்க் கொண்டிருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு ஒட்டுமொத்தமாக ஸ்போர்ட் தோற்றத்தை வழங்கியுள்ளது. 2023 கேடிஎம் டியூக் 200 மோட்டார்சைக்கிள் எலெக்டிரானிக் ஆரஞ்சு மற்றும் டார்க் சில்வர் மெட்டாலிக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.  இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள், பைபர் கேலிப்பர்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.

கூடுதல் விவரங்கள்:

மோட்டார்சைக்கிள் ஸ்பிளிட்-ட்ரெல்லிஸ் ஃப்ரேமை அடிப்படையாகக் கொண்டது மற்றும் முன்பக்கத்தில் WP அபெக்ஸ் USD ஃபோர்க்குகளையும் பின்புறத்தில் 10-படி சரிசெய்யக்கூடிய WP அபெக்ஸ் மோனோஷாக் பயன்படுத்துகிறது. முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் உள்ளது. மேலும் சூப்பர்மோட்டோ பயன்முறையுடன் கூடிய இரட்டை சேனல் ஏபிஎஸ் கிடைக்கிறது. 

விலை விவரங்கள்:

புதிய அப்டேட் மூலம் இந்த மாடல் விலை ரூ. 3 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது. 2023 கேடிஎம் டியூக் 200 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம், என்று துவங்குகிறது.  இந்திய சந்தையில் புதிய கேடிஎம் 200 டியூக் மாடல் விற்பனைக்கு வந்தால்,  டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V, ஹோண்டா ஹார்னெட் 2.0 மற்றும் பஜாஜ் பல்சர் NS200 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த புதிய மாடல் கேடிஎம் 200 டியூக் 2023 மாடல் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்; தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
Embed widget