மேலும் அறிய

ஒரே சார்ஜில் 418 கிலோமீட்டர் மைலேஜ் தரும் Komaki SE Ultra! ஓலா, ஏதர் எல்லாம் ஓரம்போ!

ஒரு முறை சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் Komaki SE Ultra இ ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்தியாவின் சாலைகளை மின்சார வாகனங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி வருகின்றனர். பெட்ரோல், டீசல் வாகனங்களை வீழ்த்தும் அளவிற்கு வேகமும், மைலேஜும் தருவதால் இதையே பலரும் விரும்புகின்றனர்.

Komaki SE Ultra:

நல்ல மைலேஜ் தரும் மின்சார ஸ்கூட்டர்களை தற்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் ஒரே சார்ஜில் 400 கிலோமீட்டருக்கும் அதிகமாக சார்ஜ் தரும் Komaki SE Ultra இ ஸ்கூட்டர் பற்றி விரிவாக காணலாம்.

இதன் டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் பேட்டரியின் எஞ்சிய அளவு, சார்ஜ் சதவீதம், இன்னும் எத்தனை கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் போன்ற தரவுகள் உள்ளது. மேலும், ஜிபிஎஸ் வசதியும் இருப்பதால் கூகுள் மேப் வசதியும் உள்ளது.

இந்த இ ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் எடுக்க வேண்டுமென்றால் 11 ஆயிரத்து 524 ரூபாய் டவுன் பேமெண்டாக கட்டினால் போதும். 3 வருடங்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரத்து 317 இஎம்ஐ-யாக தவணையாக செலுத்த வேண்டும். வருடம் குறைந்தால் தவணைத் தொகை அதிகரிக்கும். வருடம் 5 வருடமாக ஆனால் தவணைத்தொகை குறையும்.

418 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 7.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மோட்டார் ஆற்றல் 3.2 கிலோவாட் ஆகும். இதில் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

இதன் விலை ரூபாய் 1.09 லட்சம் ஆகும் (எக்ஸ் ஷோரூம்).  இந்த Komaki SE Ultra பைக் 4 வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. சிவப்பு, கருப்பு, தங்க நிறம் மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது.

சிறப்புகள்:

இதில் ஒரு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ரிமோட் ஸ்டார்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ட்ரோல் உள்ளது. ஆன்டி தெஃப்ட் அலார்ம் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் வசதி உள்ளது.  ஸ்பீடோமீட்டர், ட்ரீப்மீட்டர், ஓடோமீட்டர் வசதி உள்ளது.

சிம்பிள் அல்ட்ரா நிறுவனத்திற்கு போட்டியாக 400 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் ஒரே இ ஸ்கூட்டர் இது மட்டுமே ஆகும். 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் இந்த இ ஸ்கூட்டரின் பயன்பாடு மிகவும் உகந்ததாக இருப்பதாக இந்த இ ஸ்கூட்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வசீகர தோற்றம்:

இந்த Komaki SE Ultra இ ஸ்கூட்டரின் வடிவமும், வசீகர தோற்றமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. இதன் சஸ்பென்சன் பள்ளம், மேடு நிறைந்த சாலைகளிலும் சிரமமின்றி பயணிக்க பக்கபலமாக உள்ளது. முன்பக்கம் கால்களை நன்றாக வைப்பதற்கும், பொருட்களை ஏதேனும் வைத்துக்கொள்வதற்கும் இட வசதி உள்ளது.  ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் தோற்றத்தில் இருப்பதால் இதை பலரும் விரும்புகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget