கம்பீரம்.. ஆளுமை.. 504 கி.மீட்டர் மைலேஜ்..! Keeway SR250 பைக்கை வாங்கலாமா? விலை எப்படி?
Keeway SR250 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகன சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த வரிசையில் இந்திய சந்தையில் வளர்ந்து வரும் இரு சக்கர வாகன நிறுவனமாக இருப்பது Keeway.
Keeway SR250:
இவர்களின் மிகவும் முக்கியமான இரு சக்கர வாகனம் Keeway SR250. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தில் காணப்படும் இந்த Keeway SR250 பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 90 ஆயிரத்து 891 ஆகும். இந்த பைக்கில் 223 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. 5 கியர்கள் கொண்டது. இந்த பைக் 120 கிலோ எடை கொண்டது.
மைலேஜ்:
இந்த பைக்கில் 35.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கர் 14.2 லிட்டர் ஆற்றல் கொண்டது. இந்த பைக்கின் இருக்கை உயரம் 780 மி.மீட்டர் உயரம் கொண்டது. கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த பைக் உள்ளது.
இந்த பைக்கில் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 16 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 15.78 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 5 கியர்கள் கொண்டது. 1 கியர் கீழேவும், 4 கியர் மேலேவும் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 504.1 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
சிறப்புகள்:
பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் வசதி உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் உள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் ப்ரிலோட் அட்ஜஸ்டபிள் டூயல் ஷாக் சஸ்பென்சன் வசதியும் உள்ளது. 120 கிலோ எடை கொண்டது. இருக்கை உயரம் 780 மி.மீட்டர் உயரம் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் உயரம் கொண்டது. 2.8 லிட்டர் ரிசர்வ் வசதி உள்ளது. வாகன வாரண்டி 2 வருடம் உள்ளது.
வசதிகள்:
எல்சிடி டிஸ்ப்ளே வசதி கொண்டது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர் வசதி டிஜிட்டல் வசதி கொண்டது. டேகோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.
எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. எல்இடி ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் வசதி உள்ளது. பாஸ் விளக்குகள் வசதி உள்ளது. சிக்னல் விளக்குகள் வசதி எல்இடி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















