மேலும் அறிய

Joy E Scooter: இந்தியாவில் அதிவேக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஜாய் நிறுவனம்.. சிறப்பம்சங்கள் என்ன?

ஜாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. பொதுப்போக்குவரத்தை விட சொந்த வாகனங்களில் பயணிக்கவே  மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அதிகரித்த வாகனங்களின் பயன்பாட்டின் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தான் தற்போது, மின்சார வாகனத்தின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டே பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும், புதுப்புது மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது புதுப்புது வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த நிகழ்ச்சியில்,  ஜாய் இ பைக் நிறுவனமும் இந்திய சந்தையில் தனது புதிய அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த புதிய ஸ்கூட்டர் ஜாய் மிஹோஸ் என அழைக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வதோதராவில் உள்ள வார்டுவிசார்டு R&D குழுவினரால் உருவாக்கப்பட்டு உள்ளது.

பேட்டரி விவரம்:

மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1500 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் ஏழு நொடிகளில் எட்டிவிடும் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஜாய் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 74V40Ah லி-அயன் சார்ந்த பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. நான்கு மணி நேரத்தில் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும் என கூறப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெட்ரோ டிசைன் கொண்டுள்ளது. இதன் முன்புறம் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், வட்ட வடிவம் கொண்ட ரியர் வியூ மிரர்கள், முன்புற இண்டிகேட்டர்கள் அப்ரானில் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் வளைந்த பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ-ரிவர்சபில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் உள்ளது.

பாதுகாப்பிற்கு சைடு ஸ்டாண்டு சென்சார், ஹைட்ராலிக் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் பேட்டரி ஸ்டேட்டஸ் ரிமோட் அக்சஸ் வசதி, ரிவர்ஸ் மோட், ஜிபிஎஸ், ஆண்டி-தெஃப்ட் மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விலை விவரம்:

இந்திய சந்தையில் புதிய ஜாய் மிஹோஸ் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மெட்டாலிக் புளூ, சாலிட் பிளாக் கிளாசி, சாலிட் எல்லோ கிளாசி மற்றும் பியல் வைட் என நான்கு வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் நாடு முழுவதும் விரைவில் படிப்படியாக தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
Kia Seltos: இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
Top Range Cars: டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்
டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget