மேலும் அறிய

Cheapest AT CNG Car: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் CNG கார்கள் - 36KM வரையிலான மைலேஜ் உடன் க்ளட்ச் பிரச்னை ஓவர்

Cheapest AT CNG Car: மாருதி சுசூகியின் அதிரடியால் நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி கார் மாடல்களின் டாப் 5 பட்டியல் புத்துயிர் பெற்றுள்ளது.

Cheapest AT CNG Car: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேடிக் சிஎன்ஜி கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மலிவு விலை ஆட்டோமேடிக் சிஎன்ஜி கார்கள்:

இந்தியாவில் கார் பயன்பாடு என்பது வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சிரமமமின்றி கையள ஏதுவான வாகனங்களுக்கான எதிர்பார்ப்பு என்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதோடு, பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரக்கூடிய ஒரு கார் என்பது நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், இந்த கலவையில் ஒரு கார் கிடைப்பது என்பது சிரமமானதாகவே இருந்து வந்தது. ஆனால், அண்மையில் மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள 3 கார் மாடல்கள், ஒட்டுமொத்த ஆட்டோமேடிக் சிஎன்ஜி கார் மாடல்களின் பிரிவையே புரட்டி போட்டுள்ளது. அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கக் கூடிய டாப் 5 ஆட்டோமேடிக் சிஎன்ஜி கார் மாடல்களின் விவரங்ள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாப் 5 ஆட்டோமேடிக் சிஎன்ஜி கார்கள்:

1. டாடா டியாகோ iCNG :

டாடா டியாகோவின் iCNG ஆட்டோமேடிக் எடிஷனின் தொடக்கவிலை 7.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதனால் இந்த பிரிவில் கிடைக்கும் மலிவான கார் என்ற பெருமை டியாகோவின் இந்த எடிஷனிற்கு உள்ளது. இந்த காம்பாக்ட் ஹேட்ச்பேக், 1.2-லிட்டர் இன்ஜின், 5-ஸ்பீட் AMT மற்றும் பூட் ஃப்ளோருக்கு அடியில் ஒரு நடைமுறைக்கு ஏற்ற இரட்டை-சிலிண்டர் CNG அமைப்பை கொண்டுள்ளது. இது நகர்ப்புறத்தில் 21 கிலோ மீட்டர் வரையிலும், நெடுஞ்சாலைகளில் 24 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்கள் பிரிவில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும், சிறியவர்கள் பிரிவில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும் இது பெற்றுள்ளது.

2. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் CNG 

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய CNG ஆட்டோமேடிக் வேரியண்ட் ரூ.7.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. 1.2-லிட்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படும் இது, தினசரி பயணங்களுக்கு அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. தேசிய அளவில் இந்த கார் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படாவிட்டாலும், ஐரோப்பிய சந்தையில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. கிலோவிற்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி அறிவித்துள்ளது. ஸ்டேண்டர்டான ஸ்விஃப்டில் உள்ள அம்சங்கள், வசதிகள் அப்படியே தொடர்கின்றன.

3. டாடா டியாகோ NRG iCNG :

டாடா டியாகோ NRG iCNG எடிஷன் ரூ.8.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இது டியாகோவின் ஒரு உறுதியான க்ராஸ்-ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இதில் உயர்த்தப்பட்ட க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் அதே CNG AMT பவர்டிரெய்ன் உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தாலும், நகரங்களில் 20 கிலோ மீட்டர் வரையிலும், நெடுஞ்சாலையில் 24 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் வழங்குகிறதாம்.

4. மாருதி சுசுகி பலேனோ CNG

மாருதி சுசுகி பலேனோ ஆட்டோமேடிக் சிஎன்ஜி எடிஷனின் தொடக்க விலை ரூ.8.32 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. மாருதியின் S-CNG தொழில்நுட்பத்துடன் இணைந்து, மென்மையான ஆட்டோமேட்டிக் அனுபவத்தை வழங்கும் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக்காக பலேனோ உள்ளது. இது கிலோவிற்கு சுமார் 34 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்கள் பிரிவில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும், சிறியவர்கள் பிரிவில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும் இது பெற்றுள்ளது. ஸ்டேண்டர்டான பலேனோவில் உள்ள அம்சங்கள், வசதிகள் அப்படியே தொடர்கின்றன.

இதையும் படியுங்கள்: Kia Carens: மிடில்க்ளாஸ் குடும்பங்களுக்கான தீர்வு..! 25KM மைலேஜ் தரும் 7 சீட்டர் - கியாவின் புத்தம் புதிய பட்ஜெட் MPV

5. டாடா பஞ்ச் iCNG AMT & மாருதி டிசையர் CNG

டாடா பஞ்ச் iCNG ஆட்டோமேடிக் எடிஷனின் தொடக்க் அவிலை ரூ.8.54 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. உயர்ந்த ஓட்டுநர் நிலை, இரட்டை சிலிண்டர் பூட் ஸ்பேஸ் மேலாண்மை மற்றும் 5-ஸ்பீட் AMT உடன் கூடிய ஒரு மைக்ரோ-SUV தோற்றத்தை இந்த கார் கொண்டுள்ளது. இது கிலோவிற்கு சுமார் 27 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

மறுமுனையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி டிசையரின் சிஎன்ஜி ஆட்டோமேடிக் எடிஷனும், இதே ரூ.8.54 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இது லிட்டருக்கு சுமார் 36 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேண்டர்டான டிசையரில் உள்ள அம்சங்கள், வசதிகள் அப்படியே தொடர்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?
Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget